திருமங்கலம் ஸ்டேஷனில் ’பார்க்கிங்’ பிரச்சினை இல்லை.. அசத்திய சென்னை மெட்ரோ.. பயணிகள் ஹேப்பி!
சென்னை: திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்த நிலையில், கூடுதல் இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் விதமாக பார்க்கிங் வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேம்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகரின் மையத்தில் உள்ள பகுதிகளுக்கு கூட டிராபிக் சிக்னலில் மாட்டிக்கொள்ளாமல் எளிதாக பயணம் செய்ய முடியும். சொந்த வாகனங்கள் இருந்தாலும் கூட மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யவே விரும்புகிறார்கள்..

இதனால், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்போது வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதிலும் சென்னையில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்க கூடிய திருமங்கலம் மெட்ரோ நிலையத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்ய போதிய இட வசதிகள் இல்லை என்ற ஆதங்கத்தை பயணிகள் முன்வைத்து வந்தனர்.
தற்போதுள்ள திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் 1100 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும் அளவிற்கு மட்டுமே வசதி உள்ளது. திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தை நாள்தோறும் 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். இதனால், பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான், பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் கூடுதலாக 450 பைக்குகளை நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் பகுதி திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், "மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியை மேம்படுத்தியுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்தும் பகுதி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் அருகில் அமைந்துள்ளது. மேலும், இந்த வாகன நிறுத்தும் பகுதியில் 450 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 25 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தை பொறுத்தவரை சுரங்கப்பாதையில் உள்ள ரயில் நிலையமாகும். பச்சை வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை, சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். இதனால், பயணிகள் கூட்டம் எப்போதும் அதிக அளவில் காணப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications