10 ரயில்களுமே.. தமிழ்நாட்டில் எந்த ஊருக்கெல்லாம் நல்ல செய்தி.. .. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்ளின் கோரிக்கையை ஏற்று பல்வேறு ரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எழும்பூர்- தஞ்சாவூர் சோழன் விரைவு ரயில் உள்பட 10 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களுக்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரயில்வே கட்டமைப்புகள் பெரிய அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையை இணைக்கும் வகையில் கோவை வழித்தடமும், கன்னியாகுமரி வழித்தடமும் வலுவான கட்டமைப்பில் உள்ளது.இதில் கேரளாவை முதன்மையாக இணைக்கும் கோவை வழித்தடத்தில் இருவழிப்பாதை உள்ளது.

அதேபோல் சென்னை முதல் மதுரை வரை இருவழிப்பாதை உள்ளது.இந்த வழித்தடங்களில் எத்தனை சிறப்பு ரயில்களை ரயில்வேயால் இயக்க முடியும். இதேபோல் தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமேஸ்வரத்தை இணைக்கும் வழித்தடமும், கோவையை தென்மாவட்டங்களுக்கு இணைக்கும் வழித்தடமும் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் இல்லாத மாவட்டமே தமிழ்நாட்டில் இல்லை என்கிற அளவிற்கு ரயில்வே கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையை இணைக்கும் வகையில் எத்தனை ரயில்கள் விட்டாலும் லாபம் என்கிற நிலையே தெற்கு ரயில்வேக்கு உள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தெற்கு ரயில்வே, முக்கிய வழித்தடங்களில் ஓடும் விரைவு ரயில்கள் குறிப்பிட்ட ஊர்களில் நின்று செல்ல அனுதி அளித்து வருகிறது. அந்த வகையில் சோதனை அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தம் அளிக்கும். பின்னர் வரவேற்பு அடிப்படையில் நிரந்தரம் செய்தும் வருகிறது. அந்தவகையில், 10 ரயில்கள் குறிப்பிட்ட ஊர்களில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு தினமும் இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் (16865) கடலூர் துறைமுகத்தில் அதிகாலை 2.09 மணிக்கு நின்று செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் (16866) நள்ளிரவு 12.23 மணிக்கு நின்று செல்லும். இந்த நிறுத்தம் செப். 20-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினசரி இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் (20691) சாத்தூர் நிலையத்தில் காலை 9.30 மணிக்கு நின்று செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு தினசரி இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் மாலை 6.16 மணிக்கு நின்றுசெல்லும்.
இந்த நிறுத்தம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதுதவிர, திருப்பதி-ராமேசுவரம் வாரம் மூன்று முறை விரைவு ரயில் (16779-16780) உள்பட மேலும் தமிழகத்தில் ஓடும் 8 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications