டுவிஸ்ட்.. சத்திய சோதனை! ஆசை ஆசையா பகிர்ந்த அதிமுக மாஜி வேலுமணி - அம்புட்டும் பொய்யா? பாஜகவும் ஷாக்
சென்னை: உலகின் பெரிய அரசியல் கட்சிகள் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சிலாகித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக ட்விட்டரில் ஒரு பதிவு பகிரப்பட்டு வந்தது. Worldupdates ( Breaking ) என்ற பெயர் கொண்ட ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்த பதிவு இந்தியாவில் பல்வேறு ஊடகங்கள், அரசியல் தலைவர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. உலகிலேயே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி எது என்பதுதான் அப்பதிவின் சாரம்சம்.

அதில், முதலிடத்தில் பாஜகவும், 2வது இடத்தில் சீன கம்யூனிச கட்சியும், 3 வது இடத்தில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியும், 4 வது இடத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும்ம் 5 வது இடத்தில் அமெரிக்காவின் குடியரசு கட்சியும் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 5 வது இடத்தில் சீனாவின் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியும், 7 வது இடத்தில் அதிமுகவும், 8 வது இடத்தில் பிராஸ்பரிடி கட்சியும், 9 வது இடத்தில் இந்தியாவின் ஆம் ஆத்மி கட்சியும் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பட்டியலில் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்று இருந்தது. இதில் திமுக இடம்பெறவில்லை. இந்த நிலையில் இந்த பதிவை பாஜக மற்றும் அதிமுகவினர் அதிகளவில் பகிர்ந்து வந்தனர். தங்கள் கட்சியின் பலத்தை பாருங்கள் என்று சிலாகித்து வந்த அவர்கள், திமுக லிஸ்டிலேயே இல்லையே என்று விமர்சங்களை முன்வைத்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்பி வேலுமணி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “World updates தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள, "உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள்" பட்டியலில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் " ஏழாம் இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்டு, மாபெரும் எஃகு கோட்டையாக உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு எடப்பாடியார் அவர்கள் தலைமையில் வீறுநடை போட்டு வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது.
கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, மக்கள் நலன் சார்ந்து மக்களுக்காகவே முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய இயக்கம் அஇஅதிமுக என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி!” என்று அவர் குறிப்பிட்டு ட்விட்டர் பதிவின் லிங்கையும் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த பதிவையே World updates தளம் நீக்கிவிட்டது.
எனவே வேலுமணி பகிர்ந்த பதிவில் அவரது கருத்து மட்டுமே உள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்தால் பதிவு நீக்கப்பட்டதாக காட்டுகிறது. இதனை தொடர்ந்து அதிமுகவினர் வதந்தியை பரப்பி வந்ததாக திமுகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications