பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது அதிமுக புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியிருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது.

admk arul vignesh

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விகனேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூகவலைதளங்களில் வைரலானது. அது போல் மது போதையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கும் போய் அருள் விக்னேஷ் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனம்

இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவெக ஆட்சியில் சாமானியர்கள் முதல் பெண் ஆட்சியர் வரை பாதுகாப்பே இல்லை என சொல்லும் அளவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்தார். அவர் கூறியிருப்பதாவது: "நான் அதிகாரிகள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது.

மறுத்த அருள் விக்னேஷ்

இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்திருக்கிறேன். என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சியை சேர்ந்த நபர்கள் சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பி வருகிறார்கள். எங்களது ஆட்சியையும் என்னையும் குறை கூறும் நோக்கில் அவதூறு பரப்புகிறார்கல்.

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு

என் தலைவர் முதல்வர் சொல்வது போல் என் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல தேவையில்லை. சமூகவலைதளங்களில் பரவி வருவது போல் நான் ஆபாச குறுஞ்செய்திகளை பகிர்ந்ததில்லை. மக்கள் அளிக்கும் மனு தொடர்பான தகவல்கள் மட்டுமே ஆட்சியரிடம் பரிமாறி இருக்கிறேன்.

என் மீது பொய்யான தகவலை பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

ரவிசங்கர் மீதும் நடவடிக்கை

இந்த நிலையில் நேற்றைய தினம் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதியில் தண்ணீர் வராததால் புகார் கொடுக்க வந்த நபரை அடித்து ஆபாசமாக பேசியது, மிரட்டியது உள்ளிட்ட விவகாரங்களில் சர்ச்சையில் சிக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர், அருள் விக்னேஷ் ஆகியோரை முதல்வர் விஜய் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.

தூக்கியடிக்கப்படாத ரவிசங்கர்

துணை சபாநாயகர் பதவியில் இருந்து ரவிசங்கர் தூக்கியடிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வெறும் எச்சரிக்கையை மட்டும் விஜய் விடுத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி கண்டனம்

இந்த நிலையில்தான் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அருள் விக்னேஷுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அருள் விக்னேஷை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் வருகின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர்.
அந்த ஆட்சியர் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்தே! கேவலம்
தமிழக முதல்வரே!!

ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் , அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) ஆவார் , அவருக்கே நீதி இல்லை என்றால் , இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் முதல்வரே ?

பதில் இருக்கிறதா முதல்வரே?


பதில் என்று எதாவது உங்களிடம் இருந்து முதலில் வருமா? "உள்ளாடையுடன் நிற்கவைப்பேன்" என்று மிரட்டும் அமைச்சர்,
மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி "ஆபாச அர்ச்சனை" செய்து அதை மறைக்க முயலும் துணை சபாநாயகர், எல்லாவற்றிற்கும் மேலாக "ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்" அனுப்பிய MLA
என்று தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

தங்கள் கட்சியினர் தவறு செய்தால்
வாய்மூடி மவுனியாக இருக்கும் அரசு , மற்ற கட்சியினர் செய்திருந்தால் இன்று அனைத்து மைக்குகள் முன்னரும் so called spokespersons எவ்வளவு பேசியிருப்பர்??

நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, MLA மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா? வாக்களித்த மக்களின் பாதுகாப்பை விட, முதல்வர் நாற்காலி தான் ஜோசப் விஜய்க்கு முக்கியமென்று கருதுகிறாரா?

விஜய் சரவணன் மீது வழக்கு இருக்கிறதா?

பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் தவெக MLA விஜய் சரவணன் மீது வழக்கே பதியாமல், அவருக்கு சட்டமன்றத்திலேயே "Good Conduct Certificate" அளித்து வழக்கை இழுத்து மூடியது அதே Formula-வை அருள் விக்னேஷுக்கும் பயன்படுத்தப் போகிறதா இந்த அரசு?

ஒரு ஆட்சியாளராக மாவட்ட ஆட்சியருக்கு நடந்த இந்த கொடுமைக்கு எதிராக வழக்கு பதிந்து தன் கட்சி MLA-வை கைது செய்ய வேண்டும் நேர்மையான, அரசியல் குறுக்கீடற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். செய்வீர்களா முதல்வர் விஜய்? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+