அப்பாடா.. தமாகாவையும் பிடித்து உள்ளே போட்டது அதிமுக.. வாசன் படம் வச்சாச்சு வச்சாச்சு!
Recommended Video

சென்னை:அதிமுக,பாஜக கூட்டணியில் தொகுதிகள் தொடர்பாக தேமுதிக தொடர்ந்து பேசி வரும் நிலையில், சத்தமில்லாமல் தமாகா கூட்டணியில் இணைந்துள்ளது.
எப்போ கூட்டணியை அறிவிப்பார் என்று எதிர்பார்த்து... ஒரு கட்டத்தில் அதிமுகவினரே அதிருப்தியான நிலையில் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். அந்த கட்சிக்கு அதிமுக 4 தொகுதிகளை ஒதுக்கியது.
அவை எந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால்.... திடீரென அந்த தொகுதிகளை தேமுதிக ஏற்க மறுத்தது. பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து சுதிஷ் பேசினார்.மேலும் கூட்டணி பேச்சு வார்த்தை தொடரும் என்று சுதிஷ் அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களுக்கு அறிவித்தார்.

25 தொகுதிகள் அதிமுக
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக 25 தொகுதிகளை தம் வசம் வைத்துள்ளது. அந்த கூட்டணியில் 2வது பெரிய கட்சியாக பாமக இருக்கிறது. மொத்தம் 7 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் அள்ளி இருக்கிறது.

கூட்டணி கிடையாது
யாருடைய தலைமையில் கூட்டணி என்ற குழப்பம் தீராத நிலையில் தேசிய கட்சியான பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதிய தமிழகம் 1, ஏ.சி. சண்முகத்துக்கு 1, என்ஆர் காங்கிரசுக்கு ஒன்று என தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்த நிமிடம் வரை... பாக்கி உள்ள 25 தொகுதிகளில் அதிமுகவே போட்டியிடும் நிலை காணப்படுகிறது.

தமாகா நிலைப்பாடு
கூட்டணி பேச்சுவார்த்தைகள் கலகலப்பாகி வரும் அதே வேளையில், தமாகாவின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் இருந்து வந்தது. சில வாரங்களுக்கு முன்பாககூட... கூட்டணி குறித்து தமாகா விரைவில் அறிவிக்கும் என்று யுவராஜா கூறியிருந்தார். தேர்தலில் யாருடன் தமாகா கூட்டணி அமைக்கும் என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார்.

வந்தது தமாகா
ஆனால் காலம் முடிந்துவிட்டதாகவும், பரபரப்பான தேர்தல் களத்தில் கிட்டத் தட்ட தமாகாவை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறி இருந்தனர். அதற்கு மாறாக... அதிமுக கூட்டணியில் தமாகா இடம் பெற்றுள்ளது.

தமாகாவும் இருக்கிறது
சத்தமில்லாமல் கூட்டணியில் தமாகா இடம்பெற்றிருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு 15 தொகுதிகளை புதுச்சேரி உள்பட அதிமுக ஒதுக்கி இருக்கிறது. தேமுதிகவுக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட 4 தொகுதிகளையும் சேர்த்து, 25 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று தெரிகிறது. அதில் இருந்து ஒரு தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்படுகிறது. அது எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. அனேகமாக... மயிலாடுதுறை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது .
-
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்?












Click it and Unblock the Notifications