"முஸ்லிம்கள்".. மூக்கை நுழைத்த அதிமுக.. முந்திக் கொண்டு தடுக்கும் பாஜக.. வேடிக்கை பார்க்கும் திமுக!
முஸ்லிம் ஓட்டுக்களை குறி வைத்து அதிமுக, திமுக
சென்னை: இஸ்லாமிய வாக்குகளை இந்த முறை அள்ள போவது யார்? திமுகவா? அதிமுகவா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.. இதற்கு அடிப்படையாக உள்ளது சிஏஏ விவகாரம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த முறை தேர்தலில் அதிமுக - திமுக இரண்டுமே படுமும்முரமாக களத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. வேட்பாளர்களை அறிவித்துவிட்டு 2 தரப்புமே பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக "சிஏஏ" விவகாரம் தமிழக அரசியலை பரபரப்பாக வைத்து வருகிறது.. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

சிஏஏ விவகாரம்
அதிமுகவின் இந்த அறிவிப்பும், பாஜகவின் இந்த எதிர்ப்பும் தேர்தல் களத்தில் எப்படி எதிரொலிக்கும்? என்ற சந்தேகங்களும் நமக்கு இல்பாகவே எழுகின்றன. சிஏஏ விவகாரத்தில் திமுகதான் அதிகமாக எதிர்த்தது.. தமிழகத்தில் பல போராட்டங்களை முன்னெடுத்தது.. பேரணி நடத்தது.. சட்டசபையில் வெளிநடப்பும் செய்தது.. வழக்கமாக இஸ்லாமியர்களின் ஆதரவு திமுகவுக்கு கணிசமாக இருந்து வரும் நிலையில், சிஏஏ சம்பந்தமான எடுத்த நடவடிக்கைகளும் அந்த சமுதாய மக்களை கவர்ந்தது.

திமுக
இதுபோக, தற்போது மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் அரவணைத்து சீட் தந்து, இருக்கும் வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளது. இதற்கு பிறகுதான், திடீரென திமுகவின் அந்த தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என்றும் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்க வலியுறுத்தப்படும் என்று சொல்லப்பட்டது..

திமுக
இப்போதெல்லாம் திமுக எது செய்தாலும், அதை அப்படியே அதிமுகவும் அறிவிப்பதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது.. அதுபோலவே, அதிமுக சிஏஏ விவகாரத்தை கையில் எடுத்தது.. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது.. திமுகவுக்கு செல்லக்கூடிய இஸ்லாமிய வாக்குகளை தடுக்கவே அதிமுக இவ்வாறு சொல்கிறது என்பது தெரிந்த விஷயம்தான்.. ஆனால், இது தேர்தல் அரசியலாகவும் பார்க்கப்படுகிறது..

தீர்மானம்
அன்று சிஏஏவுக்கு தீர்மானம் நிறைவேற்றும்போது, அதிமுக ஏன் ஆதரித்தது? ஆதரிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் வெளிநடப்பு செய்திருக்கலாமே? அன்று ஆதரித்தது ஏன்? இன்று பின்வாங்குவது ஏன்? தேவையில்லாமல் இந்த விஷயத்தை அதிமுக அரசு தொட்டுவிட்டதோ என்று தெரிகிறது. இப்போது கூட்டணியில் உள்ள பாஜகவும் கொந்தளித்துள்ளது..

சிடி ரவி
இந்து ஓட்டுக்களை குறி வைத்தும், இந்துத்துவாவை முன்வைத்தும், எந்த வகையிலும் விட்டுத்தராத நிலையில், அதிமுகவின் இந்த பேச்சை பாஜக ரசிக்கவில்லை.. சிடி ரவி பேசும்போது, சட்டத்தை திரும்ப பெற மாட்டாது என்று கறாராக சொல்லிவிட்டார்.

ஜெயக்குமார்
இதுகுறித்து இன்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லும்போதுகூட, "சிறுபான்மையின மக்களைப் பாதிக்கும் எந்தக் கொள்கையிலும் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். கட்சியைப் பொறுத்தவரைக்கும் கூட்டணி இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்குள் கொள்கைகள் மாறுபடலாம். கொள்கை வேறு, கூட்டணி வேறு" என்று உறுதி செய்துள்ளார்.

வாக்குகள்
இப்போது, இஸ்லாமிய பெருமக்களின் ஓட்டுக்களை அதிகமாக பெறுவது அதிமுகவா? திமுகவா என்ற பேச்சும் வருகிறது.. ஆனால், இங்குதான் அமமுகவை பற்றியும் யோசிக்க வேண்டி உள்ளது.. அமமுக கூட்டணியில் உள்ள ஓவைசி கட்சியும், எஸ்பிடிஐயும் பெருமளவு வாக்குகளை அள்ளி கொண்டு போகும் சூழலும் உள்ளதால், இதில் அதிமுகவுக்கு மேலும் சறுக்கல் வரலாம் என தெரிகிறது.

பாதுகாவலன்
இந்த 4 வருட காலமாக இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி உட்பட பல சலுகைகளை அதிமுக அரசு செய்து வந்துள்ளது.. நாகூர் தர்காவுக்கு எடப்பாடியார் சென்றது முதல் பல வகைகளில் முஸ்லிம் மக்களின் பாதுகாவலனாகவும் இருந்து வருவதால், திமுகவுக்கு செல்லும் இஸ்லாமிய வாக்குகளை அதிமுக திசை திருப்பும் என்றும் நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!
-
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள்












Click it and Unblock the Notifications