வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை ரத்து செய்த வழக்கு! சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக மேல்முறையீடு
சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க தமிழக அரசு கையகப்படுத்தியதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, இந்த தீர்ப்பை அளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் தவறுகள் நடந்துள்ளது என தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை. தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாததால் நீதிமன்றத்தை நாடியதாக அதிமுக கூறுவதை ஏற்க முடியாது.
நடைமுறை தவறுகள் உள்ளதாலும் பொதுப் பயன்பாடு இல்லை என்றும் உரிமையாளர் விருப்பத்திற்கு முரணாக கையகப்படுத்தப்பட்டு உள்ளதாலும் தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியமில்லை என கூறி அதிமுகவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்த நிலையில் அதிமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications