அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது தண்டனையா? பரிசா? முதலமைச்சருக்கு அதிமுக கேள்வி!
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டிருப்பது தண்டனையா, பரிசா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூட துணிவில்லையா என முதல்வரை அதிமுக ஐடி விங் வினவியுள்ளது.
மேலும், நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள் என்ற கேள்வியையும் முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி வைத்துள்ளது அதிமுக ஐ.டி.விங்.

அமைச்சர் பதவிகள்
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மீது முதுகுளத்தூர் பிடிஓ அளித்த புகாரால் அவரிடம் இருந்த வளம் கொழிக்கும் துறையான போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டு அது சிவசங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அமைச்சர் சிவசங்கர் வசம் இதுநாள் வரை இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனுக்கு மாற்றித் தரப்பட்டுள்ளது.

இலாகா மாற்றம்
அமைச்சர்களின் இந்த இலாகா மாற்றம் திமுக ஆட்சிப் பொறூப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாற்றம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கையால் மற்ற அமைச்சர்கள் சிலரும் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிபார்த்து பக்குவமாக நடந்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ஐடி விங்
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பும் வகையில் விமர்சனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டிருப்பது தண்டனையா, பரிசா என வினவப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;

அதிமுக பதிவு
''அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பது தான் நீங்கள் வழங்கும் உச்சபட்ச தண்டனையா? இது தண்டனையா அல்லது பரிசா? ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூட துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள்?'' இவ்வாறு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி டிவிட்டர் பக்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications