சத்தமேயில்லையே.. நேரமும் சரியில்ல.. ஒரே "புள்ளி"யில் திமுக, அதிமுக.. மிரண்ட பாஜக.. எங்க போயி முடியுமோ
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி நிஜமாகவே முறிந்துவிட்டதா? அல்லது எதிர்க்கட்சிகள் சொல்வது போல அரசியல் நாடகமா? என்ற விவாதம் கிளம்பி வருகிறது.
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கு பாஜக எந்த கருத்தையும் சொல்லவில்லை... ரியாக்ட் செய்யவுமில்லை.. ஆனால், கடுமையான அப்செட் ஆகியிருப்பதாக தெரிகிறது..

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் இப்படியொரு முடிவு எடுத்திருப்பது கலக்கத்தையும் குழப்பத்தையும் தந்து வருகிறது.. இது பாஜகவுக்கான சறுக்கலையும் பெற்று தந்துவிடும். அதிமுகவுடனான இந்த கூட்டணி முறிவை டெல்லி மேலிட தலைவர்களும் விரும்பவில்லை.. தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களும் விரும்பவில்லை போல தெரிகிறது.
சந்தேகங்கள்: ஆனால், அண்ணாமலை இதுகுறித்து எதுவுமே பேசவில்லை.. அவரது மவுனம் பலவித சந்தேகங்களையும், யூகங்களையும் ஏற்படுத்தி வருகிறது..
இப்படிப்பட்ட சூழலில், டெல்லி தலைமை அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியதாகவும், உடனடியாக டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த அழைப்பை ஏற்று கோவையில் இருந்து இன்றிரவே அண்ணாமலை டெல்லிக்கு செல்கிறார்.. பாஜக தலைவர்களையும் சந்தித்து பேச போவதாக தெரிகிறது.
இதனிடையே, அதிமுக - பாஜகவின் இந்த முடிவை பலர் ஆதரித்து வருகின்றன.. திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் இந்த முடிவை வரவேற்று வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.. பேராசிரியர் ஜவாஹிருல்லா உட்பட திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள், "இதெல்லாம் ஒரு டிராமா" என்று சொல்லி வருகிறார்கள். மேலும் சில தலைவர்களோ, இதை பற்றி கருத்தே சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்கள். காரணம், தன்னுடைய நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்குமா? என்ற சந்தேகம் அவர்களுக்குள் இருப்பதாக தெரிகிறது.

ஒரே புள்ளி: இவை எல்லாமே சேர்ந்து, அரசியல் களத்தில் ஒரு விவாதத்தை உண்டுபண்ணி வருகிறது.. அத்துடன், திமுகவுக்கு மிகப்பெரிய சவால் ஒன்று காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ஒரு சேனலுக்கு ஷ்யாம் பேட்டி தந்துள்ளார்.. நிறைய கருத்துக்களை அதில் அவர் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அதிமுக - திமுகவை, ஒரே புள்ளியில் நிறுத்தி பேசியிருப்பது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
வரும் 2026-ல் நாங்கள்தான் முதல்வர், தமிழகத்தை ஆளப்போவது பாஜகதான் என்ற அண்ணாமலையின் பேச்சுதான் இதற்கெல்லாம் காரணமாக அமைந்துவிட்டது.
அதிமுக கூட்டணியில், தமிழ்நாடு எப்போதுமே தேசிய கட்சிகளின் ஆட்சியை எதிர்த்து வந்திருக்கிறது.. 1967ல் தான் கடைசி தேசிய கட்சியின் ஆட்சி நடந்தது.. ஆக மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே தமிழகத்தின் தாரக மந்திரம். இனி எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவித்துள்ளது, ஜெயலலிதாவின் நிலைப்பாடுதான்..

கானல் நீர்: திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகளை இணைத்து போட்டியிடலாம் என்று அதிமுக நினைக்கலாம்.. ஆனால், அது உறுதியாக நடக்குமா என்று தெரியவில்லை.. அதிமுகவின் நிலைப்பாடு தேர்தல் சமயத்திலும் மாறலாம் அல்லது கடைசி நேரத்தில் பங்கீடு கேட்கலாம்..
ஆனால், திமுகவுக்கு இதுவரை வெற்றிகளை பெற்று தந்துவருவது, பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள்தான்.. இந்த ஓட்டுக்களை, அதிமுகவும் இனிமேல் தன்பக்கம் இப்போது திருப்ப வேண்டி உள்ளது.. அதிமுகவின் வாக்கு வங்கியையும் மேலும் பலப்படுத்தி காட்ட வேண்டி உள்ளது. அதுபோலவே, பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக தன் பக்கம் முழுமையாக தக்க வைக்க வேண்டியும் உள்ளது.
பாஜகதான் தமிழகத்தில் ஆட்சி என்றால் அதிமுக ஒப்புக் கொள்ளாது.. காங்கிரஸ்தான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றால் திமுகவும் ஒப்புக்கொள்ளாது.. ஆக, திமுகவும் - அதிமுகவும் ஒரே புள்ளியில் தற்போது இணைந்துள்ளன. "பாஜக எதிர்ப்பு" என்ற புள்ளியில் இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. இந்த பாஜக எதிர்ப்பினை யார் அறுவடை செய்ய போகிறார்கள்?
வசந்தி கல்யாணம்: ரெய்டு உட்பட இனியும், அதிமுகவுக்கு பாஜக தொந்தரவை தந்தால், அவையெல்லாம் அதிமுகவுக்கு அனுதாப அலைகளாக திரும்பவிடும்.. கர்நாடகத்தில் சிவக்குமாருக்கு தரப்படாத தொந்தரவுகளா? அதையெல்லாம் தாண்டிதானே வந்திருக்கிறார்கள்.. எனவே, "வசதி கல்யாணம்" என்பது எப்போதுமே நிலைத்து நிற்காது" என்று கருத்து கூறியிருக்கிறார் ஷ்யாம்.
-
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications