அரசியல் கத்துக்குட்டி.. பக்குவமில்லை.. விளம்பர பிரியர் அண்ணாமலை.. விளாசிய நத்தம் விஸ்வநாதன்
சென்னை: தன்னை தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குடி அண்ணாமலை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகி விட்டது. அதிமுக தலைவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி விமர்சித்தது, அண்ணாவை பற்றி கூறிய தகவல்கள் அதிமுகவினரின் கோபத்தை அதிகரித்தது.

அண்ணாமலைக்கு எதிராக காட்டமான கருத்துக்களை அதிமுக நிர்வாகிகள் பதிவிட்டனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்கப் போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரிந்தது பிரிந்ததுதான் தொண்டர்கள் மனநிலையில் உள்ளதைத்தான் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக உடனான கூட்டணியை அவ்வளவு எளிதாக விடத் தயாராக இல்லை பாஜக. பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று பாஜக துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கூறியுள்ளார். அதை ஏற்க தயாராக இல்லாத அதிமுக நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அதிமுக தலைமையில் மீண்டும் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன், அதிமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த பாஜக நீக்கப்பட்டுள்ளது. அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை கூட்டணியை கூட பாராமல் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்தார். தன்னை தானே விளம்பரப்படுத்தும் ,முதிர்ச்சியற்ற ஒரு பக்குவமும் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் பாஜகவின் கொள்கைகள் மீது அதிமுகவுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை அதிமுகவின் தயவு இல்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications