அரசுக் கட்டிடத்தில் கட்சிக் கூட்டம்... மதுரையில் புதிய சர்ச்சை
சென்னை: மதுரையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் முழுக்க முழுக்க கட்சி தொடர்புடையது என்பதாலும், தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்பதாலும் அரசு கட்டிடத்தில் அதை எப்படி நடத்தலாம் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதுரை அழகர்கோவில் சாலையில் அரசு சுற்றுலா மாளிகை(சர்க்யூட் ஹவுஸ்) உள்ளது. அங்கு முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.அதிகாரிகள் உள்ளிட்டோர் மட்டும் தான் தங்க முடியும்.

ஆனால் சமீபகாலமாக அமைச்சர்கள் பெயரைக் கூறி அதிமுகவினர் அரசு சுற்றுலா மாளிகையை ஆக்கிரமித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நாங்குநேரி இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அந்த மாளிகையில் நடந்துள்ளது. திட்ட ஆய்வு உள்ளிட்ட அரசுப் பணிகளுக்காக பயன்படுத்த வேண்டிய அரசுக் கட்டிடத்தை, அதிமுக கட்டிடமாக நினைத்து கூட்டம் நடத்தியுள்ளதாக திமுகவினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது அந்தக் கட்சியினர் இங்கு கூட்டங்களே நடத்தியது இல்லையா என, எதிர்க்கேள்வி எழுப்புகிறார் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நிர்வாகி.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications