சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. துணி துவைத்து கொண்டிருந்த பெண்.. அருகில் சென்ற வேட்பாளர்.. "கொஞ்சம் நகரு".. மிரண்ட நாகூர்

அதிமுக வேட்பாளர் துணி துவைத்து தந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: பெண் ஒருவர் அவர் வீட்டு வாசலில் உட்கார்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார்.. இதை பார்த்ததும் அதிமுக வேட்பாளர் செய்த காரியத்தை பார்த்ததும், நாகூர் மக்கள் வாயை பிளந்துவிட்டனர்.

Recommended Video

    சூப்பர்.. துணி வைத்து கொண்டிருந்த பெண்.. அருகில் சென்ற வேட்பாளர்.. கொஞ்சம் நகரு.. மிரண்ட நாகூர் - வீடியோ

    விரைவில் தேர்தல் நடக்கிறது.. எப்படி எப்படியோ முட்டி மோதி பலரும் சீட் வாங்கிவிட்டனர்.. எத்தனையோ பேருக்கு சீட் தரப்படாமல் அதிருப்தியில் உள்ள நிலையில், வாய்ப்பு கிடைத்தவர்கள் தேர்தலில் வெற்றி பெற கடுமையாக முயன்று வருகிறார்கள்.

    அந்த வகையில், ஓட்டு சேகரிக்க செல்லும்போது, புதுப்புது யுக்திகளை வேட்பாளர்கள் கையாண்டு மக்களைக் கவர முயன்று வருகின்றனர்.

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை

    இப்படித்தான் மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கி.காசிராமன் ஓட்டு கேட்டு வந்தார்.. பிறகு திடீரென ஒரு அரிவாளை எடுத்து, அங்கிருந்த கருவேல மரங்களை படபடவென வெட்டி வீழ்த்தினார்.. இறுதியில், "இயற்கையைப் பாதுகாப்போம்" என்று முழங்கினார்.. இதை அந்த தொகுதி மக்கள் அப்படியே மிரண்டு பார்த்தனர்.

    நாகை

    நாகை

    அதுபோல, இன்னொரு சம்பவம் நாகப்பட்டினம் தொகுதியில் நடந்துள்ளது.. அதிமுக வேட்பாளர் கதிரவன் நாகூர் வண்டிப்பேட்டை பகுதியில் ஓட்டு கேட்க போனார்.. அப்போது ஒரு பெண், வீட்டுக்கு பின்பக்கம் துணி துவைத்து கொண்டிருந்தார்.. இதை கதிரவன் பார்த்துவிட்டார்..

     துணி சோப்பு

    துணி சோப்பு

    "கொஞ்சம் தள்ளும்மா".. என்று சொல்லிவிட்டு, அந்த துணியை வாங்கி கொண்டு தரையில் உட்கார்ந்தார்.. பக்கத்தில் இருந்த துணி சோப்பை எடுத்து அந்த துணிக்கு சரசரவென சோப்பு போட்டார்.. வேக வேகமாக அடித்து துவைத்தார்.. கடகடவென அலசி பிழிந்தார்... துணி துவைத்து கொண்டே, அந்த பெண்ணிடம், "ஏம்மா.. மறக்காமல் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு போட்டுடும்மா" என்றார். வேட்பாளர் துணி துவைத்து தருவதை பார்த்து, நாகூர் பகுதி மக்கள் மூக்கின் மேல் விரலை வைத்துவிட்டனர். இவர் துணி துவைக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     வீடியோ

    வீடியோ

    இதை பற்றி கதிரவன் சொல்லும்போது, "பெண்கள் கஷ்டப்பட்டு முதுகு வலிக்க துணி துவைச்ச காலம் எல்லாம் போதும்.. இனிமேல் பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.. அந்த தேர்தல் அறிக்கையை விளக்கிதான் வாக்கு சேகரித்தேன்... தேர்தல் பிரசாரத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்றார்.

     காமெடி

    காமெடி

    சும்மா சொல்லக் கூடாது.. குத்த வைத்து உட்கார்ந்து நல்லா கும்மி கும்மி அழகாகத்தான் துணி துவைத்தார் கதிரவன்.. துவைக்கிற விதத்தைப் பார்த்தா டெய்லி அவர்தான் வீட்டிலும் "கும்முகிறார்" போல... செம காமெடிதான்!

    English summary
    ADMK candidate washes clothes while election campaign in Nagapattinam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X