அதிமுகவினருக்கு ஒரு நற்செய்தி.. நாளை முதல் நியூஸ் ஜெ.. ஒளிபரப்பை தொடங்குகிறது!
நியூஸ் ஜெ. சேனல் துவக்க விழா நாளை மாலை நடைபெறுகிறது.
Recommended Video

சென்னை: அதிமுகவின் புதிய சேனலான நியூஸ் ஜெ. நாளை தொடங்கப்பட உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக இணைந்து இந்த சேனலை ஆரம்பித்து வைக்க போகிறார்கள்.
முதமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தங்களது கட்சிக்காகவும் ஆட்சிக்காகவும் நியூஸ் ஜெ. தொலைக்காட்சியை செப்டம்பர் மாதம் துவங்கினர். ஜெயா டிவி தங்கள் கையை விட்டு போன நிலையில், தங்களது கட்சிக்கென ஒரு டி.வி தேவைப்படவே இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்டது.

எழுத்து பிழை
நியூஸ் ஜெ-வின் லோகோ அறிமுகம், இணையதளத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் பேசப்பட்டவை அனைத்தும் நியூஸ்ஜெ டுவிட்டர் பக்கத்தில் உடனுக்குடன் பதிவாகியது. கூடவே அப்போது வாள்முனைக்கு பதில் வால்முனை என ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் அன்றைய விழா பரபரப்பாக பேசப்பட்டது. அந்த அறிமுக விழாவிலேயே ‘நியூஸ் ஜெ' தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார்கள்.

அதிமுக நிர்வாகிகள்
அதன்படி நியூஸ் ஜே சேனலின் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. இந்த சேனலை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சேர்ந்து ஆரம்பித்து வைக்க உள்ளனர். நாளை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

ஜெயா டிவி
ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவினர் அனைவரும் ஜெயா டிவியைதான் தங்கள் கட்சிக்கு பலமாக, உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் பல்வேறு சூழல் காரணமாக டிடிவி தினகரனின் வசம் முழுவம் ஜெயா டிவி போய்விட்டதால், அதிமுக என்ற பலம் வாய்ந்த கட்சிக்கு என்று தனியாக சேனல் இல்லை என்று நிர்வாகிகள் வருத்தப்பட்டார்கள். பிறகுதான் அம்மா பத்திரிகை, நியூஸ் ஜெ. ஆரம்பிப்பது என்று முடிவானது.

பலத்தை காட்டுமா?
தற்போது 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. பாராளுமன்ற தேர்தலும் நெருங்கி வருகிறது. இந்த தேர்தல்களில் அதிமுக அரசுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த நியூஸ் ஜெ... இருக்குமா? அல்லது ஜெயா டிவியை மிஞ்சி தன் பலத்தையும், திறனையும் நியூஸ் ஜெ... காட்டுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications