உழைப்பாளர் தினத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் அஜித் - பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஓ.பி.எஸ்.
சென்னை: உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகர் அஜித்குமார் என ட்விட்டரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சிவாஜி - எம்.ஜி.ஆர்., ரஜினி - கமல் என்ற தமிழ் சினிமா நடிகர்களின் போட்டி இணை வரிசையில் அடுத்த தலைமுறையாக வந்ததுதான் அஜித் - விஜய் இணை. இருவருமே இன்று வரை பல கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளனர்.
அந்த வகையில் அமராவதியில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வலிமையுடன் 60 திரைப்படங்களை நிறைவு செய்த அஜித்குமார் நாளை மே 1 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

வாழ்த்து மழையில் அஜித்
1971 ஆம் மே 1 ஆம் தேதி பிறந்த நடிகர் அஜித்குமாரின் 51 வது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் தொடங்கி சினிமா, அரசியல் பிரபலங்கள் வரை பலரும் இப்போதே வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக அவரது ரசிகர்கள் வலிமையோடு பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இப்போதே அஜித்தின் திரையுலக சாதனை குறித்து தகவல்களை திரட்டி வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் அமர்களம்
ஹேஷ்டேக்குகள், பேன் மேட் போஸ்டர்கள் என சமூக வலைதளங்களை அமர்களப்படுத்தி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். அண்மையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வலிமை திரைப்படம் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் திரையரங்குகளுக்கு திரும்ப திரும்ப சென்று படத்தின் வசூலுக்கு பங்கம் வராமல் சாதனை படைக்க அஜித் ரசிகர்கள் பெரும் பங்காற்றி இருக்கின்றனர்.

நாளை அப்டேட் வெளியாகுமா?
நாளை தனது அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நேர்கொண்ட பார்வை, வலிமையை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 61 வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அஜித்தின் 62 வது படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. 63 வது படத்தில் 4 வது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த திரைப்படங்கள் குறித்து ஏதேனும் தகவல் நாளை வெளியிடப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன.
Recommended Video

ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
இந்த நிலையில்தான், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!" எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications