அதிமுக மா.செக்கள் கூட்டத்தை திடீரென தள்ளி வைத்த எடப்பாடி.. ஓபிஎஸ்- ரஜினி சந்திப்பால் பிளான் சேஞ்ச்?
சென்னை: வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இன்று ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியது, இந்த தேதி மாற்றத்திற்குக் காரணமாக இருக்குமோ என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
அதிமுக தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 4.9.2023 - திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம், தேதி மாற்றப்பட்டு 10.9.2023 - ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

10.8.2023 அன்று நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அதிமுகவின் 'பொன்விழா எழுச்சி மாநாடு' மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். எனினும், மாநாட்டில் வழங்கப்பட்ட சாப்பாடு கீழே கொட்டப்பட்டு வீணடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரம் தீவிரமடைந்துள்ளது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை, இந்தியா கூட்டணி தேர்தல் வியூகங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணி சார்பாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாதையில் புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தை அடுத்த கலியனூர் பகுதியில் நாளை நடைபெற உள்ளது. இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்தச் சூழலில், நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கே சென்று ஓபிஎஸ் இன்று சந்தித்துள்ளார்.
சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் நிலவரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நாளை காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications