"அம்மா இப்போ உங்களுக்கு போன் பண்ணுவாங்க.. அதிமுகவின் அதிரடி திட்டம்
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் ஆடியோ குரல் கேட்க போகிறதாம்.
சென்னை: "அம்மா இப்போ உங்களுக்கு போன் பண்ணுவாங்க.. உங்க பேர் சொல்லி பேசுவாங்க.. ஓட்டு கேட்பாங்க" என்ற புது ஐடியாவை அதிமுக தேர்தல் வியூகமாக இறக்க போகிறது.
தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே இல்லாமல் முதல்முறையாக சந்திக்க போகும் தேர்தல் இது என்பதால் இரு கட்சிகளிடமும் மும்முரம் ஏற்பட்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவும், ஆட்சியை பிடிக்க திமுகவும் தேர்தல் யுக்திகளை புதுசாக அணுக ஆரம்பித்துள்ளனர். இந்த விஷயத்தில் அதிமுக ஒருபடி மேல போய்விட்டது. சமூகவலைதளங்களில் வாக்கு சேகரிப்பு வேலை ஆரம்பமாகி உள்ளது.

தலைவர்களின் ஆடியோ
ஒவ்வொருத்தர் செல்போனிலும் அம்மாவே பெயர் சொல்லி கூப்பிட்டு அதிமுகவுக்கு ஓட்டு போடும்படி கேட்க போவதுதான் அந்த புது ஐடியாவாம்! பொதுவாக பிரச்சார சமயங்களில், ஓட்டு கேட்பது போல கட்சி தலைவர்களின் குரல் பதிவு செய்யப்பட்டு, வாக்காளர்களின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆர்கே நகர்
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் இதனை ஜெயலலிதா இருந்தபோது சரியாகவே பயன்படுத்தினார்கள். அதிக அளவு வெற்றியையும் இது தேடி தந்தது. ஆர்.கே.நகர் தேர்தலிலும் இதே யுக்திதான் பயன்படுத்தப்பட்டது. இப்போதும் அதே பாணியை இந்த முறையையும் பின்பற்ற அதிமுக முடிவு செய்துள்ளதாம்.

தகவல் தொழில் நுட்ப குழு
அதாவது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப குழுவினர்தான் இது போன்ற ஒரு பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ளனர். வரும் தேர்தல் பிரசாரத்தில் குரல் பதிவு தொழில் நுட்பத்தை அதிமுக மேலும் மேம்படுத்தி இருக்கிறது. அதில் வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு அந்த ஆடியோ வரும். ஜெயலலிதாவின் குரலில் பதிவான பிரசார ஆடியோ அது.

பிரச்சார குரல்
அதில் செல்போன் எண்ணுக்கு உரியவரின் பெயரை ஜெயலலிதா கூப்பிட்டு, அதிமுகவுக்கு வாக்கு கேட்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளதாம்! மேலும் இந்த பிரசார குரல் தினமும் லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜெயிக்க போகிறார்களோ, இல்லையோ, தங்களின் பெயர்களை அம்மாவே அழைத்து ஓட்டு கேட்டு பேச போவதால் தொண்டர்கள் உற்சாகமாகி உள்ளார்களாம்!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications