Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்டி போடு.. அதிமுகவின் "சாமி" திமுக பக்கம் வர போறாராமே.. மெகா பதவிக்கு குறி!

ஆஸ்பயர் சுவாமிநாதன் திமுகவில் இணைவதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்த விஐபி ஒருவர், திமுக பக்கம் தாவ முயற்சி செய்து வருகிறாராம்.. அதுமட்டுமல்ல கட்சியின் முக்கியமான பொறுப்பு ஒன்றையும் குறி வைத்து அந்த விஐபி காய் நகர்த்தி வருவது, திமுகவில் பலருக்கு எரிச்சலை கூட்டி உள்ளதாக கூறப்படுகிறது..!

மநீமய்யத்தில் இருந்து கோவை மகேந்திரன் விலகிய நிலையில், திமுகவில் இணைந்தார்.. அப்போது மகேந்திரனுக்கு எந்த மாதிரியான பொறுப்பு தரப்படும்? கொங்குவில் ஏற்கனவே சில திமுக சீனியர்கள் இருந்தாலும், மகேந்திரனுக்கான பொறுப்பு கட்சியின் வளர்ச்சிக்கு மேலும் உதவுமா? சரிந்து போன செல்வாக்கை, கொங்குவில் தூக்கி நிறுத்த மகேந்திரன் எந்த அளவுக்கு பங்களிப்பை தருவார் என்ற எதிர்பார்ப்புகள் எகிறின.

பிறகு, மகேந்திரனுக்கு திமுக ஐடி விங்க் அணியின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கி அழகு பார்த்தது திமுக தலைமை.. ஏற்கனவே, திமுகவின் ஐடி விங்க் செயலாளராக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ள நிலையில், மகேந்திரன் அவருக்கு தன்னுடைய பங்களிப்பை தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது..

 ஆக்டிவ்

ஆக்டிவ்

ஆனால், மகேந்திரன் பெரிதாக ஆக்டிவாக இல்லை என்றும், அதற்கான சூழ்நிலைகளும் ஏற்படவில்லை என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவின் ஐடி விங்க் செக்ரட்டரியாக இருந்த ஆஸ்பயர் சுவாமிநாதன் பற்றின ஒரு செய்தி கசிந்து வருகிறது.. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து அக்கட்சியிலிருந்து திடீரென வெளியேறினார் ஆஸ்பயர் சுவாமிநாதன்.. இவர் அதிமுகவின் ஐ.டி.விங்க்கிற்கு ஜெயலலிதாவால் நேரடியாகவே கொண்டு வரப்பட்டவர்.. இந்த பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டபிறகு சில புகார்கள் வெடித்தன..

 சுவாமிநாதன்

சுவாமிநாதன்

அதாவது, ஐ.டி.பீல்டில் சுவாமிநாதனுக்கு போதிய திறமை இல்லை என்பதுடன், சில பாலியல் குற்றச்சாட்டுகளும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.. இதையடுத்துதான் அவர் ஐ.டி.விங்கிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.. இதற்கு பிறகு, தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தந்து அவர் பின்னால் சென்றார். அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் இணைந்த பிறகு, அவரது சிபாரிசில் மீண்டும் ஐ.டி.விங்க்கில் நியமிக்கப்பட்டார் சாமிநாதன்.

 திமுக

திமுக

அதிமுகவில் இருந்தவரை, திமுகவையும் ஸ்டாலினையும் மிக கடுமையாக விமர்சித்து கொண்டே இருந்தார்.. அதிலும் நடந்து முடிந்த தேர்தலின்போது, "திமுக இனி ஆட்சிக்கே வரமுடியாது.. ஸ்டாலின் முதல்வராகவே முடியாது" என்பது போன்ற பல ஆவேச ஸ்டேட்மெண்ட்களை காட்டமாக கூறினார்.. கடுமையாக விமர்சித்தார்.. ஆனால், எதிர்பாராத விதமாக அதிமுக தோல்வியடைந்ததால், அங்கிருந்து வெளியேறினார் அஸ்பயர் சுவாமிநாதன்.

 கங்கணம்

கங்கணம்

இதற்கு பிறகு இவர் என்ன ஆனார் என்றே தெரியாதபட்சத்தில், ஒருதகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. திமுகவில் இணைந்து ஐ.டி.விங்கில் ஒரு முக்கிய பொறுப்பை தட்டிக்கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டி வருகிறாராம்.. இதற்காகவே முதல்வருக்கு நெருக்கமான ஒருவரின் சிபாரிசை நெருங்கி கேட்டுக் கொண்டுள்ளாராம்.. குறிப்பாக, ஐ.டி.விங் மாநில செயலாளர் பதவியில் தன்னை நியமிக்க போகிறார்கள் என்று சாமிநாதன் தரப்பில் இருந்தே செய்திகள் கசியவிடப்பட்டு வருகிறதாம்.. அந்த பதவியை குறிவைத்துதான் பகீரத முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறார் சாமிநாதன்.

 தலைமை

தலைமை

ஆனால், அந்த பொறுப்பில்தான் பிடிஆர் இருக்கிறார்.. பிடிஆரை பொறுத்தவரை திமுக தலைமைக்கு நெருக்கமானவர்... நகமும் சதையும் போல.. பிடிஆர் மீது முதல்வர் ஸ்டாலின் அபரிமிதமான நம்பிக்கையை வைத்திருப்பவரும்கூட.. அப்படியிருக்கையில் அமைச்சரிடமிருக்கும் கட்சி பதவியை எப்படி காலி செய்ய முடியும்? என்ற கேள்வியால், இணைச் செயலாளர் பதவியை அடுத்த சாய்ஸாக முன்னிறுத்தி ரகசிய முயற்சியில் குதித்துள்ளாராம் சாமி..

 பரபரப்பு

பரபரப்பு

எனினும் அஸ்பயரின் முயற்சியை திமுகவில் சிலர் விரும்பவில்லையாம்.. திமுகவையும் ஸ்டாலினையும் சாமிநாதன் எப்படியெல்லாம் விமர்சித்தார், கேவலமாக எழுதினார் என்பது குறித்த விபரங்களையெல்லாம் தொகுத்து ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகிறார்களாம்.. இதை அஸ்பயர் எப்படி முறியடிக்க போகிறார்? தனக்கு அடுத்தபடியாக பிடிஆரை நியமித்தால் பிடிஆர் எப்படி எதிர்கொள்வார்? முக்கியமாக முதல்வர் என்ன முடிவு எடுக்க போகிறார்? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+