கருணாநிதியின் பேரன்! துணை முதல்வர் உதயநிதிக்கு நான் அட்வைஸ் செய்வதா? பாராட்டும் ராஜேந்திர பாலாஜி!
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியோட பேரன், அவருக்கு போய் நான் என்ன அட்வைஸ் சொல்ல முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் எந்த சாதனையையும் செய்யாமல், கட்சியில் மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது உதயநிதிக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது என அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரே உதயநிதிக்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக சுறுசுறுப்பாக இயங்குகிறார். 45 வயதில் துணை முதல்வர் பொறுப்பு வகிக்கிறார், அமைச்சராகி துணை முதல்வராக ஆகிவிட்டார்.
அவருக்கு ஒரு பப்ளிசிட்டி, எல்லா இடங்களுக்கும் போகிறார். அவர் கருணாநிதியோட பேரன், உதயநிதி பிறக்கும் போதே கருணாநிதி முதல்வராக இருந்தார், ஆட்சி அதிகாரத்தில் இருந்தார், பாரம்பரிய கட்சியான திமுகவின் தலைவராக இருந்தார். உதயநிதி என்ன புதியவரா, அவருக்கு போய் நான் என்ன அட்வைஸ் சொல்றது? என ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மூலம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி விருதுநகரை சேர்ந்த அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் ரூ 30 லட்சம் பெற்றதாக புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications