அதிமுக மாஜிக்களுக்கு நெருக்கமான கரூர் அன்புநாதன் கைது! பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் அதிரடி
அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு நெருக்கமான கரூர் அன்புநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்த கரூர் அன்புநாதனை குற்றப்பிரிவு போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். ரூ. 6 கோடி பண மோசடி புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் என்று அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்த கரூர் அன்புநாதன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அன்புநாதன்
கரூரில் இருக்கும் முக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் அன்புநாதன். இவர் மாஜி அதிமுக அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமான நபராக அறியப்படுகிறார். இவரைத்தான் இப்போது குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 6 கோடி ரூபாய் பண மோசடி புகாரில் கரூர் அன்புநாதனை கைது செய்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இப்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ. 6 கோடி மோசடி
பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகக் கடை உரிமையாளர் அளித்த புகாரில் இப்போது கரூர் அன்புநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்த கடை உரிமையாளருடன் கூட்டுச் சேர்ந்து தொழில் செய்வதாகக் கூறி ரூ.6 கோடி வாங்கிய அன்புநாதன், அதன் பின்னர் தொழிலும் தொடங்காமல்.. வாங்கிய பணத்தைத் திருப்பியும் தராமல் ஏமாற்றியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் என்ன
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கரூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடி வந்துள்ளனர். இருப்பினும், கடந்த ஒரு வாரமாக அன்புநாதன் தலைமறைவாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கிய நிலையில், கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று அன்புநாதனை கைது செய்துள்ளனர்.

யார் இவர்
அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படும் அன்புநாதனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2016 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அதிரடி ரைடு நடத்தப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதேபோல அரவக்குறிச்சி தேர்தல் சமயத்திலும் இவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இது மட்டுமின்றி, இவர் மீது வெளிநாடுகளுக்குச் சட்ட விரோதமாகப் பணத்தைக் கொண்டு சென்றது தொடர்பாகவும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications