“அமுல் பேபி” அமர் பிரசாத்.. ஓவரா பேசுறாரு! கண்டிங்க அண்ணாமலை - எச்சரித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ
"தேவையற்ற கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கும் இந்த அமுல் பேபியை கண்டிச்சி வைங்க அண்ணாமலை” என்று அமர் பிரசாத் ரெட்டியை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விமர்சித்துள்ளார்.
சென்னை: அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியில் இருந்து வெளியேறிய பாஜக ஐடி விங் முன்னாள் மாநில தலைவர் நிர்மல் குமாரை அதிமுகவில் இணைத்ததற்கு பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி அதிருப்தி தெரிவித்து இருந்த நிலையில் அவருக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நேற்று முன்தினம் பாஜகவில் இருந்து விலகிய நிர்மல் குமார் ட்விட்டரில், "என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவர் வெளியிட்டு இருந்த கடிதத்தில் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல், 420 மலை என்று கடுமையாக விமர்சித்து தன்னுடைய விலகலுக்கான காரணத்தை குறிப்பிட்டு இருந்தார் நிர்மல் குமார்.

நேர்மையாக பணியாற்றினேன்
அந்த கடிதத்தில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்.

செருப்பாக பயன்படுத்துகிறார்
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற எதுவும் இல்லை.

செங்கல் வியாபாரம்
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

அமைச்சருடன் பேச்சு
2019 யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

420 மலை
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அதிமுகவில் நிர்மல் குமார்
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நிர்மல் குமார். இந்த காலத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் எடப்பாடி அவர்கள்தான் எதிர்காலமாக இருப்பார். அவரால்தான் முடியும். வேறு யாராலும் முடியாது. அந்த நம்பிக்கை எடுக்க வலுவாக உள்ளது." என்று ஒன் இந்தியா தமிழ் நேர்காணலில் தெரிவித்தார் நிர்மல் குமார்.

அமர் பிரசாத் ரெட்டி கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி, "அதிமுக கூட்டணியில் இருந்தபடி இதை செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்."

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம், "கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எல்லாம் அதிமுக மட்டும் தான்! தேவையற்ற கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கும் இந்த அமுல் பேபியை கண்டிச்சி வைங்க அண்ணாமலை" என்று விமர்சித்து இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications