நம்பியவர்களை கழுத்தறுக்கிறார் Ops! தம்பியை நீக்கியதால் நீங்கள் நல்லவரா? விளாசும் பெங்களூர் புகழேந்தி
சென்னை: தன்னை நம்பியவர்கள் அனைவரையும் ஓ.பி.எஸ். ஏமாற்றி கழுத்தறுப்பதாக அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி தெரிவித்திருக்கிறார்.
தம்பியை கட்சியை விட்டு நீக்கியதால் நீங்கள் ஒன்றும் நல்லவர் ஆகிவிட மாட்டீர்கள் என தனது வீடியோ பதிவில் ஓ.பன்னீர்செல்வத்தை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
மேலும், ஜெயக்குமாருக்கான மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜிக்கும், மணிகண்டனுக்கும் ஏன் நடத்தவில்லை என வினவியிருக்கிறார்.

வீடியோ பதிவு
சசிகலாவை சந்தித்த காரணத்துக்காக ஓ.ராஜாவை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நீக்கியது குறித்து அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓ.ராஜாவுக்கே இந்த நிலை என்றால் சையது கானின் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், சசிகலா விவகாரத்தை வைத்து விளையாட்டுச் செய்தியை போல் பேட்டிகள் கொடுக்கப்பட்டு வருவதாக சாடியிருக்கிறார்.

ஜெயக்குமாருக்கு மட்டும்
அதேபோல் ஜெயக்குமார் கைதுக்கு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜிக்கும், மணிகண்டனுக்கும் ஏன் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பியிருக்கிறார். ஓ.பி.எஸ். ஏன் தான் இப்படி இருக்கிறார் என தனக்கு புரியவில்லை என்றும் அவரை பற்றி மேலும் பேச ஒன்றுமில்லை எனவும் அவரை விமர்சித்துள்ளார். ஓ.பி.எஸ். தவறு மேல் தவறு செய்து வருவதாக சாடினார்.

நல்லவர் இல்லை
இன்று சொந்த தம்பியையே கட்சியை விட்டு நீக்கிவிட்டார் என்பதால் அவர் ஒன்றும் நல்லவர் ஆகிவிட முடியாது என்றும் தனது மதிப்பையும் தன் மீதான நம்பகத்தன்மையையும் ஓ.பி.எஸ். இழந்து வருவதாகவும் பெங்களூர் புகழேந்தி தெரிவித்திருக்கிறார். சசிகலாவை இணைக்கக்கோரி நேற்று ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தவர்களும் அச்சத்துடன் இருப்பதாகவும் அவரை நம்பி எதுவும் செய்ய முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
Recommended Video

கடும் விமர்சனம்
பெங்களூர் புகழேந்தியை போலவே அதிமுகவில் உள்ள பலரும் ஓ.பி.எஸ். மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இதனிடையே ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்கிய விவகாரம் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications