கிருஷ்ணகிரி ஜெகன் கொலை.. எடப்பாடி வீசிய பந்து! கொன்றதே அதிமுக நிர்வாகிதான் - ஸ்டாலின் அடித்த சிக்சர்
சென்னை: கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஜெகன் பெண்ணின் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொலை செய்த பெண்ணின் தந்தை சங்கர் அதிமுக கிளை செயலாளர் என்று தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழ்நாடு சட்டசபை கூடியது.
அப்போது மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, சீனிவாசன், கு.சீனிவாசன், பின்னணி பாடகர் வாணி ஜெயராம் ஆகியோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்
இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்துகொண்டவர் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களால் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பதில்
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது அவர், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். அதேபோல் இளைஞர் ஜெகனின் கொலையில் அதிமுக கிளை செயலாளருக்கு தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிமுக கிளை செயலாளருக்கு தொடர்பு
ஜெகன் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தை அதிமுகவில் கிளை செயலாளராக இருப்பதாக ஸ்டாலின் கூறினார். "அதிமுக கிளை செயலாளர் சங்கர் உள்ளிட்ட 3 பேர் தாக்கியதால் ஜெகன் உயிரிழந்து இருக்கிறார். நாம் அனைவரும் அரசியலை கடந்து ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும்.

அதிமுகவினர் அமளி
கல்லூரி மாணவி சரண்யாவுடைய குடும்பத்தினரின் எதிர்ப்புகளை மீறி அவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்தால் ஜெகன் கொல்லப்பட்டு இருக்கிறார்." என்றார். இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இளைஞர் ஜெகன் கொலைக்கு அதிமுக கிளை செயலாளர் சங்கர் காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications