சாவி எங்க பக்கம்.. ஐநா சபைக்கே போனாலும் வெற்றி எடப்பாடிக்குத்தான் - தீர்ப்பால் ஜெயக்குமார் செம குஷி!
சென்னை : எங்கே சென்றாலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெற்றி கிடைக்காது. ஓபிஎஸ் தரப்பு ஐ.நா சபைக்கே சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெற்றி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கில், தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு ஈபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஸ் தரப்பிற்கு இந்த தீர்ப்பு இடி விழுந்தது போல் இருக்கும் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அதிமுக தலைமைக் கழகம்
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிரடி தீர்ப்பு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதிமுக தலைமைக் கழகத்தில் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது என்றும், தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகம்
கட்சி பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுக தலைமைக் கழக சாவியும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே கிடைத்திருப்பதால் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஓபிஎஸ் தரப்பு பின்னடைவைச் சந்தித்து வருவது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு புது தெம்பைக் கொடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "அதிமுக அலுவலகம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனால், ஓபிஸ் தரப்பிற்கு இந்த தீர்ப்பு இடி விழுந்தது போல் இருக்கும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த கோயில் அதிமுக தலைமை அலுவலகம். அப்படிப்பட்ட கோயிலை இடிப்பது போல் ஓபிஎஸ் செய்த கீழ்த்தரமான செயல் அதிமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது.

ஓபிஎஸ்ஸூக்கு பாடம்
இதனால் தொண்டர்கள் மனம் நொந்து போயினர். கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு பாடம் கற்பிப்பது போல உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அமைந்துள்ளது. இனி ஓபிஎஸ் என்ன சட்ட நடவடிக்கை எடுத்தாலும் சரி, அவர்களிடம் இனி என்ன இருக்கிறது? அதிமுக தொண்டர்களுக்கு வீணாக மன உளைச்சல் ஏற்படுத்த நினைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ஐ.நாவுக்கே சென்றாலும்
எங்கே சென்றாலும் ஓபிஎஸ் தரப்புக்கு வெற்றி கிடைக்காது. ஓபிஎஸ் தரப்பு ஐ.நா சபைக்கே சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெற்றி கிடைக்கும். அதிமுக உட்கட்சி விதிகளின்படி பொதுக்குழு அதிகாரம் படைத்தது. சர்வ வல்லமை படைத்த பொதுக்குழு முடிவின்படி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் முடிவும்.

முறியடிப்போம்
ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமைக் கழகம் பூட்டியே கிடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது. ஆனால், இன்று தலைமைக் கழக சாவி எங்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும், பொதுக்குழு எனும் அமைப்பின் அதிகாரப்பூர்வ முடிவுகள் எங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. கட்சி விதிகளின்படியே எல்லாம் நடந்திருக்கின்றன. ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டில் என்ன வாதம் வைத்தாலும், எங்கள் சட்ட வல்லுநர்கள் அதை முறியடிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
தமிழகத்தில் துரந்தர் 2 படத்தை தடை செய்ய நீதிமன்றத்தில் மனு.. இந்த ஒரு விஷயம் தான் பிரச்சனை!












Click it and Unblock the Notifications