அம்மாவின் ஆசிபெற்றவர் நடிகர் அஜித் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: அம்மாவின் ஆசிபெற்றவர் நடிகர் அஜித்குமார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டரில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவாஜி - எம்.ஜி.ஆர்., ரஜினி - கமல் என்ற தமிழ் சினிமா நடிகர்களின் போட்டி இணை வரிசையில் அடுத்த தலைமுறையாக வந்ததுதான் அஜித் - விஜய் இணை. இருவருமே இன்று வரை பல கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளனர்.
அந்த வகையில் அமராவதியில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வலிமையுடன் 60 திரைப்படங்களை நிறைவு செய்த அஜித்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

வாழ்த்து மழையில் அஜித்
1971 ஆம் மே 1 ஆம் தேதி பிறந்த நடிகர் அஜித்குமாரின் 51 வது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் தொடங்கி சினிமா, அரசியல் பிரபலங்கள் வரை பலரும் ஒரு வாரமாகவே வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக அவரது ரசிகர்கள் வலிமையோடு பிறந்தநாளை கொண்டாடினர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து அஜித்தின் திரையுலக சாதனை குறித்து தகவல்களை திரட்டி வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் அமர்களம்
ஹேஷ்டேக்குகள், பேன் மேட் போஸ்டர்கள் என சமூக வலைதளங்களை அமர்களப்படுத்தி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். அண்மையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வலிமை திரைப்படம் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் திரையரங்குகளுக்கு திரும்ப திரும்ப சென்று படத்தின் வசூலுக்கு பங்கம் வராமல் சாதனை படைக்க அஜித் ரசிகர்கள் பெரும் பங்காற்றி இருக்கின்றனர்.

வெளியாகாத அப்டேட்?
நாளை தனது அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நேர்கொண்ட பார்வை, வலிமையை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 61 வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
Recommended Video

ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நடிகர் அஜித்துக்கு நேற்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!" எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜெயக்குமார் வாழ்த்து
அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் இன்று ட்விட்டரில் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், "இதயதெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்களின் ஆசியை பெற்றவரும்,சமூக கருத்துக்களை எண்ணற்ற இளைஞர்களுக்கு 'வலிமை' போன்ற திரைப்படங்கள் மூலம் எடுத்துரைத்து நல்வழிப்படுத்தும் சகோதரர் #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!" என பதிவிட்டு உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications