Flashback: “மட்டன் சாப்பிட்டு மட்டையாகிட்டேன்”.. கூவத்தூர் ரிசார்ட்டில் காமெடி செய்த தி.நகர் சத்யா!
சென்னை: அதிமுக மாஜி எம்.எல்.ஏ தி.நகர சத்தியா, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கியுள்ளார். ஒன் டைம் எம்.எல்.ஏவான தி.நகர் சத்தியநாராயணன், 2017 கூவத்தூர் ரிசார்ட் காலத்திலேயே ட்ரெண்டிங்கில் இருந்தவர். அப்போது அவர் சொன்ன 'மட்டன் சாப்பிட்டு மட்டையாகிட்டேன்' டயலாக் ஓபிஎஸ் தரப்பினராலும், எதிர்க்கட்சிகளாலும் கடுமையாக கிண்டலுக்கு உள்ளானது.
தி.நகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சத்யா என்கிற பி.சத்தியநாராயணன், தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இவர் 2011-2016ல் சென்னை மாநகர கவுன்சிலராகவும், 2016 - 2021 வரை எம்.எல்.ஏவாகவும் இருந்தவர். ஒரே ஒரு முறை எம்.எல்.ஏவாக இருந்த தி.நகர் சத்தியா, சொத்துக்குவிப்பு புகாரில் சிக்கி தற்போது ரெய்டில் மாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கும் மிகவும் நெருக்கமான தி.நகர் சத்தியா, கூவத்தூர் ரிசார்ட் காலத்திலேயே ட்ரெண்டிங்கில் இருந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கியதால், சசிகலா தரப்பு, அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் பாதுகாப்பாக தங்கவைக்க கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்றது.
கூவத்தூர் விடுதியில் தமிழக அமைச்சர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், தங்க வைக்கப்பட்டனர், அங்கு எம்.எல்.ஏக்கள் என்ன செய்கின்றனர் என்ற விஷயங்கள் குறித்து மர்மமாக இருந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பினர், அதிமுக எம்.எல்.ஏக்கள் மிரட்டப்படுவதாகவும், கோடி கோடியாக பணம் கொடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியது.
அப்போது தான், கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான தி.நகர் எம்எல்ஏ சத்யா, தாங்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக ஓப்பன் டாக் கொடுத்தார். மட்டன் சாப்பிட்டதால் மட்டையாகிட்டேன். ஜீரணமாகாததால் வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறேன் என அவர் அளித்த பேட்டி அரசியல் களத்தில் ரணகளமானது.
கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்ட நிலையில், அப்பகுதியே அல்லோலகல்லோலப் பட்டது. அப்போது விடுதியில் நடைபெறும் செய்திகளை சேகரிப்பதற்காக பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அதிமுக எம்எல்ஏக்கள், அவ்வப்போது ரிசார்ட்டில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துனர்.

அதிமுகவின் அப்போதைய தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏ தி.நகர் சத்யா , கூவத்தூர் ரிசார்ட் வளாகத்தில் டி-ஷர்ட், பெர்முடாஸ் சகிதமாக குறுக்கும் நெடுக்குமாக வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். முகப்பில் இருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, 'காலையிலேயே டிஃபன் உடன் வேலூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மட்டன் பரிமாறப்பட்டது. ருசியாக இருந்ததால், அதிகமாக சாப்பிட்டு மட்டையாகிவிட்டேன். சாப்பிட்டது ஜீரணமாகாததால் ரிசார்ட் வளாகத்தில் நடைப்பயிற்சி செய்து வருகிறேன். நாங்கள் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல்வேறு கட்டு கதைகளை அவிழ்த்துவிட்டு வருவதால் இங்கு நடப்பதை நான் கூறினேன்' எனத் தெரிவித்திருந்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications