சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி திணிப்பு.. சுதந்திர தின விழாவில் மத்திய அரசுக்கு அதிரடி பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி திணிப்பு விவகாரத்தில் தங்களது நிலைப்பாடு குறித்து அதிமுக அரசு மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது.

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. மும்மொழிக் கொள்கை என்பது தமிழை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சி என அரசியல் கட்சியினர் கருதுகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களும் நடந்தது. இந்த மும்மொழி கொள்கைக்கு அரசியல்வாதிகள் இல்லாமல் கலைத்துறையினரை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பயணிகள் கவனத்துக்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து பயணிகள் கவனத்துக்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கற்றதால் இந்த உயர்வு

கற்றதால் இந்த உயர்வு

அப்போது வெங்கையா நாயுடு பேசுகையில் அவர் கூறுகையில் எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது. எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது. தாய் மொழி மட்டுமின்றி மற்ற மொழிகளையும் கற்றதால் இந்த உயர்வை பெற முடிந்தது.

மத்திய அரசு

மத்திய அரசு

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தாய்மொழியில் பேச கற்றுக் கொடுங்கள். அதே நேரம் மற்ற மொழிகளை கற்க செய்யுங்கள். மற்ற மொழிகளையும் ஆழமாக கற்க வேண்டும் என்றார் வெங்கையா. மும்மொழி கொள்கையை எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசுக்கு மத்திய அரசின் அறிவுரையாகவே இது பார்க்கப்பட்டது.

உறுதி

உறுதி

வெங்கையா அறிவுறுத்திய போது முதல்வரும் துணை முதல்வரும் சிரித்தபடியே நெளிந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் சுதந்திர தினத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் இந்தியை திணிக்கக் கூடாது. இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தியை திணிக்க எடுக்கப்படும் முயற்சியை முறியடிக்க உறுதியாக உள்ளோம் என்றார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

தமிழக முதல்வரின் இந்த பதிலானது, மத்திய அரசுக்கு பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. இந்தி மொழி திணிப்பு தொடர்பாக இனி எதிர்ப்பு நிலைப்பாட்டை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றே கூறப்படுகிறது.

English summary
ADMK government expresses its stand about three language policy and CM announces his statement very firmly by opposing trilingual policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X