நம்பிக்கையில்லா தீர்மானமா? சில விஷயங்களை பொதுவெளியில் சொல்ல முடியாது! திகில் கிளப்பிய எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தவெக அரசு அமைந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆட்சிக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்ற கருத்து கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பான கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சில விஷயங்களை பொது வெளியில் சொல்ல முடியாது' என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை சந்திக்க அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருந்தார்.

தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதா? என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் விஜய்யும் நேற்று தனது கட்சி எம்.எல்.ஏக்களை அழைத்து மாமல்லபுரம் ஹோட்டலில் வைத்து ஆலோசனை நடத்தினார்.

Edappadi palaniswami says can t talk everything publicly over NO confidence motion

பொதுவெளியில் சொல்ல முடியாது

தவெக அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று பரபரப்பாக பேசப்படக்கூடிய நிலையில் முதல்வரின் இந்த ஆலோசனை, கூடுதல் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக செங்கோட்டையன் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- எதை பொதுவெளியில் பேச வேண்டும். எதை பொதுவெளியில் பேசக்கூடாது என்று உள்ளது. அதனால் சில கருத்துகள்தான் சொல்ல முடியும். செங்கோட்டையன் அவருடைய கருத்தை சொல்கிறார். எங்களுடைய கருத்து என்னவென்றால் அப்படி ஒரு சூழல்வந்தால் அனைவரையும் அழைத்து தெளிவாக சொல்வோம்.

கும்பகர்ணன் போல தூங்கிக்கொண்டு இருக்கிறது

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் முதல்வர் விஜய் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தவெக ஆட்சி அமைத்த பிறகு இன்று வரை கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அரசு கும்பகர்ணன் போல தூங்கிக்கொண்டு இருக்கிறது. எவ்வளவு முறை தட்டி எழுப்பினாலும் எழுந்தபாடில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க திராணியற்ற அரசாக இது இருக்கிறது" என்று கூறினார்.

முன்னதாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையனிடம், தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், "நம்பிக்கையில்ல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறதா? என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் யாரும் சொல்லவில்லை.

அரசு தயாராக உள்ளது - செங்கோட்டையன்

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதையும் சந்திக்க அரசு தயாராக உள்ளது" என்று கூறியிருந்தார். செங்கோட்டையனின் இந்த கருத்து தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போதுதான் அவர் 'சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது' என்று கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+