ஆட்சியமைக்க அதிமுக வைத்திருந்த 2 திட்டங்கள்.. உண்மையை உடைத்த தினகரன்
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைத்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயற்சி நடைபெற்றதாக புகார் எழுந்தது. ஆட்சியமைக்க அதிமுக 2 திட்டங்களை வைத்திருந்தது என்றும் அதன் பின்னணி குறித்தும் டிடிவி தினகரன் விவரித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கினார். அதில், "திமுக தீயசக்தி, நாங்கள் தூயசக்தி என்று சொல்லி தான் தவெக தேர்தலை சந்தித்தது. திமுக வீழ்த்துவோம் என்பதுதான் அவர்களின் தேர்தல் பிரச்சாரமாக இருந்தது. இதை சொல்லித்தான் அவர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பிறகு திமுக கூட்டணியின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளனர். பாஜக உள்ளே வந்துவிடக்கூடாது என்று எங்களை சொல்கிறார்கள். பாஜக ஒரே ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற்றது. ஆட்சியமைப்பது தொடர்பாக அவர்கள் தலையிடவே இல்லை.

அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க நாங்கள் 2 திட்டங்களை வைத்திருந்தோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைப்பதற்கு தவெக தலைவர் விஜயிடம் ஆதரவு கோர திட்டமிட்டிருந்தோம். அதிமுக வாக்குகளை உடைத்து தவெக வெற்றி பெற்றது. ஆகையால் தவெக ஆதரவு பெறும் திட்டத்தை நாங்கள் வைத்திருந்தோம். விஜயால் ஆட்சியமைக்க முடியாது. எங்கள் கட்சியை உடைத்ததால் அவரின் ஆதரவை கேட்கும் திட்டமிருந்தது.
ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதைத்தானே இடதுசாரிகளும், விசிகவும் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். திருமாவளவனை முதலமைச்சராக்குவதற்கு நாங்கள் திமுகவின் ஆதரவை கேட்கவில்லை. பாஜக பின்னணியில் இருக்குமோ என்று பயந்து இடதுசாரிகள் திருமாவளவனை முதலமைச்சராக்கும் திட்டத்தை ஏற்கவில்லை. திருமாவளவனை முதலமைச்சராக்கும் முயற்சி நடைபெற்றது. இதில் பாஜகவின் பின்னணி இல்லை. தவெக ஆதரவுடன் ஆட்சியமைப்பதுதான் எங்கள் திட்டம்.
திமுகவிடம் நாங்கள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நாங்கள் ஆட்சியமைப்பதற்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவின் பின்னணியிலும் நாங்கள் செயல்படவில்லை. திமுகவிடம் ஆதரவு பெற்று நாங்கள் ஆட்சியமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். எங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணமே இல்லை. திமுகவும் எங்களிடம் அப்படி எந்த முயற்சியும் செய்யவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
