இளைஞர்களுக்காக அடுக்கடுக்காக.. அதிமுக அறிவித்துள்ள வாக்குறுதிகள், யூத்தெல்லாம் ஹேப்பி
சென்னை: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு உறுதியாக வழங்கப்படும் என்று அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. போட்டித் தேர்வுகளை எழுதுபவர்கள் தங்களின் கனவு நிஜமாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம், நெசவாளர்கள் நலன், விவசாயிகள் வளம் பெறுவதற்கான பல்வேறு திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், முதல் முறை வாக்காளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை வளம் பெற செய்வதற்கான திட்டங்கள் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 18 வயது உடையவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் வாகன பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உறுதி என்ற அறிவிப்புகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான அறிவிப்புகள்:
* பெற்றோர்களின் சுமைகளை குறைத்திடும் வகையில் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்
*கல்லூரி மாணவர்களுக்கு 2GB Data ஆண்டுதோறும் வழங்கப்படும்

* அரசு பள்ளியில் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்
* இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்
மாணவர்கள், இளைஞர்கள் என இளம் வயதினரை அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெகுவாக கவர்ந்துள்ளது. இளைஞர்களும் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகளுக்கு நன்றிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தமிழக இளைஞர்கள் அ.தி.முகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் என்று தெரிய வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications