ஸ்டாலின் பிரதமராகணும்! ஓட்டு கேட்ட அப்பாவு! இவர் நடுநிலை சபாநாயகரா? வீடியோவால் கொதித்த இன்பதுரை
சென்னை: ஸ்டாலின் பிரதமராக வேண்டும் என 100 நாள் பணியாளர்களிடம் ஓட்டுகேட்ட தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுவின் வீடியோ வலைதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை சபாநாயகராக அப்பாவு உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ ஆவார். இந்நிலையில் தான் சமீபத்தில் அப்பாவு 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்த வேளையில் அவர்களுக்கு வேலை வழங்கும் நாட்கள், சம்பளம் உள்ளிட்ட விபரங்களை அப்பாவு கேட்டறிந்தார். அதன்பிறகு அப்பாவு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர், ‛‛150 நாள் வேலை தரும் கோரிக்கை உள்ளது. 100 நாளுக்கு மத்திய அரசு பணம் தருகிறது. கருணாநிதி, மன்மோகன் சிங் இருந்ததுபோல் வரும் தேர்தலில் நமக்கு வேண்டிய ஆள் பிரதமராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முக ஸ்டாலினே பிரதமராக வேண்டும். அப்போது தான் 150 நாள் வேலை இருக்கும்.
அதனை நாங்கள் மறக்கவில்லை. அடுத்ததாக வரும் தேர்தல் உங்கள் கையில் தான் இருக்கு. உங்கள் ஊரை பற்றி எங்களுக்கு தெரியும். நமக்கு 100 சதவீதம் ஓட்டு போடும் மக்கள். நீங்கள் திமுக, கருணாநிதி, ஸ்டாலினுக்கு தான் ஓட்டுபோடுவீங்கனு எனக்கு தெரியும். நன்றியுள்ள மக்கள். வழக்கம்போல் நீங்கள் ஓட்டு போடுவது போல் இந்த முறையும் ஓட்டளிக்க வேண்டும்'' என்றார்.

இந்நிலையில் தான் சபாநாயகர் அப்பாவுவின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதற்கு அதிமுகவின் முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான இன்பதுரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ஓட்டு கேட்ட சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் எப்படி நடுநிலையாக செயல்படுவார்? என கேள்வி கேட்டு விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛நூறு நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு பணம் தரவில்லை! எனவே ஸ்டாலின் பிரதமராக வர ஓட்டு போடுங்க! மரபை மீறி திமுகவுக்கு ஓட்டு கேட்ட சபாநாயகர் அப்பாவு! சட்டபேரவையில் இவர் எப்படி நடுநிலையாக செயல்படுவார்? நடுநிலை தவறிய அப்பாவு எப்படி சபாநாயகராக தொடர முடியும்?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications