முதல்வர் வேட்பாளர் யார்?.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

வரும் 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து இப்போதே கட்சிகள் வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டன.

ADMK is discussing about CM candidate

இந்த நிலையில் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை முன்னிலைப்படுத்தியே சட்டசபைத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.

ஆனால் அவர்கள் இருவரும் தற்போது காலமாகிவிட்டதால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சிக்கான வலுவான முகத்தை இறக்க முடிவு செய்துள்ளன. அதன்படி திமுகவுக்கு ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதிமுகவில் இந்த முடிவில் பல குழப்பங்கள் உள்ளன.

அண்மையில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு அதிரடி பதிலை அளித்தார். அதாவது 2021-ஆம் ஆண்டு சட்டசபை உறுப்பினர்கள் கூடி யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே முதல்வர் வேட்பாளர் என தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜியோ, எடப்பாடியாரே முதல்வர் என ட்விட்டரில் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் முதல்வர் வேட்பாளர் குறித்து கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதில் வரும் தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்படுவதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+