சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தம்பிதுரைக்கு மீண்டும் சீட்.. 4 வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு.. வெளியானது அதிமுக பட்டியல்

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது. அது போல் 18 சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலையும் அதிமுக வெளியிட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு 33 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் படு பிஸியாக இருக்கின்றன. இந்த நிலையில் அதிமுக- பாமக- பாஜக- தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விரும்பிய தொகுதிகளை பெற தவறிய தேமுதிக.. 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பே இல்லை! விரும்பிய தொகுதிகளை பெற தவறிய தேமுதிக.. 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பே இல்லை!

அதிமுக அறிவித்தது

அதிமுக அறிவித்தது

இவை போக மீதமுள்ள 20 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் ஹோட்டல் ஒன்றில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக அறிவித்தது.

அதிமுக போட்டி

இதில் அதிமுக சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி), பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி (தனி), திருநெல்வேலி, நாகப்பட்டனம் (தனி), மயிலாடுதுறை, திருவள்ளூர் (தனி), காஞ்சிபுரம் (தனி), தென் சென்னை ஆகிய இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.

18 சட்டசபை வேட்பாளர்கள்

18 சட்டசபை வேட்பாளர்கள்

அமமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் அதிமுகவும் இன்று 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெளியிட்டது.

தம்பிதுரைக்கு மீண்டும் சீட்

தம்பிதுரைக்கு மீண்டும் சீட்

அது போல் 18 சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலையும் அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் பட்டியலிலும் வாரிசுகள் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் இருக்கிறார். லோக்சபா துணை சபாநாயகருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

லோக்சபா அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்:

1. சேலம்- சரவணன்

2. நாமக்கல்- காளியப்பன்

3. கிருஷ்ணகிரி- கேபி முனுசாமி

4. ஈரோடு- ஜி மணிமாறன்

5. கரூர்- தம்பிதுரை

6. திருப்பூர்- எம்எஸ்எம் ஆனந்தன்

7. பொள்ளாச்சி- மகேந்திரன்

8. ஆரணி- செஞ்சி ஏழுமலை

9. திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி

10. சிதம்பரம் (தனி)- சந்திரசேகர்

11. பெரம்பலூர்- என் ஆர் சிவபதி

12. தேனி- ரவீந்திரநாத்

13. மதுரை- ராஜ் சத்யன்

14. நீலகிரி (தனி)- தியாகராஜன்

15. திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன்

16. நாகப்பட்டினம் (தனி)- தாழை சரவணன்

17. மயிலாடுதுறை- ஆசைமணி

18. திருவள்ளூர் (தனி)- வேணுகோபால்

19. காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமரவேல்

20. தென் சென்னை- ஜெயவர்த்தன்


சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர்களின் பட்டியல்:

1. பூந்தமல்லி (தனி)- ஜி வைத்தியநாதன்

2. பெரம்பூர்- ஆர் எஸ் ராஜேஷ்

3. திருப்போரூர்- திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம்

4. சோளிங்கர்- ஜி சம்பத்

5. குடியாத்தம் (தனி) - கஸ்பா ஆர் மூர்த்தி

6. ஆம்பூர்- ஜே ஜோதிராமலிங்கராஜா

7. ஒசூர்- எஸ் ஜோதி (முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி)

8. பாப்பிரெட்டி - ஏ கோவிந்தசாமி

9. அரூர் (தனி)- வி சம்பத்குமார்

10. நிலக்கோட்டை (தனி)- எஸ் தேன்மொழி

11. திருவாரூர்- ஆர் ஜீவானந்தம்

12. தஞ்சாவூர் - ஆர் காந்தி

13. மானாமதுரை- எஸ் நாகராஜன்

14. ஆண்டிப்பட்டி- ஏ லோகிராஜன்

15. பெரியகுளம் (தனி)- எம் முருகன்

16. சாத்தூர் - எம்எஸ்ஆர் ராஜவர்மன்

17. பரமககுடி (தனி) - என் சதன்பிரபாகர்

18. விளாத்திகுளம் - பி சின்னப்பன்

English summary
ADMK is going to announce list of candidates who are going to contest in LS elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X