நீங்க மட்டும்தான் பண்ணுவீங்களா.. ‘திமுக அமைப்புச் செயலாளர்’ - அழகிரியை உள்ளே இழுத்த அதிமுக நிர்வாகி!
சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பை முதல்வர் ஸ்டாலின் சீண்டிய நிலையில், அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன், முக.அழகிரியை திமுக அமைப்புச் செயலாளர் எனக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டது எடப்பாடி தரப்பை எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு ஈபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மு.க.அழகிரி வகித்த பொறுப்பு கருணாநிதி காலத்திலேயே நீக்கப்பட்ட நிலையில், அவரை திமுக அமைப்புச் செயலாளர் எனக் குறிப்பிட்டுள்ளார் அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன்.

ஸ்டாலின் ட்வீட்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு ட்வீட் எடப்பாடி தரப்பை கொந்தளிக்கச் செய்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற விருப்பம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்தார். முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ்ஸுக்கு பின்னால் திமுக
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திமுகவையும் ஓபிஎஸ்ஸையும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக அரசு உதவி செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து, சீல் வைக்க காரணமாக இருந்ததற்கும் திமுகவின் திட்டமே காரணம் என ஈபிஎஸ் தரப்பினர் விமர்சித்தனர்.

ஒருங்கிணைப்பாளர் பதவி
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாகக் கூறி வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மொத்தமாக நீக்கி, பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை என்று ஓபிஎஸ் கூறி ஈபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி வருகிறார். இந்நிலையில், 'அதிமுக ஒருங்கிணைப்பாளர்' எனக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் எடப்பாடி தரப்பிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஈபிஎஸ் தரப்பு கொதிப்பு
முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டே நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளதாகவும், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமைப்புச் செயலாளர் அழகிரி
இந்நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளரும், ஐ.டி விங் சென்னை மண்டல செயலாளருமான கோவை சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக அமைப்பு செயலாளர் மு.க.அழகிரியின் சகோதரர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

பதிலடி
திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக கருணாநிதியால் நியமிக்கப்பட்டிருந்த மு.க.அழகிரி பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு எதிரான வகையில் ட்வீட் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் அமைப்புச் செயலாளர் அழகிரியின் தம்பி எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் கோவை சத்யன்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!












Click it and Unblock the Notifications