ஓ.பி.எஸ் உடன் பேசியது என்ன? - விளக்கிய வைத்திலிங்கம்.. “இது வேற விஷயம்”.. அந்த மேட்டரை பேசவே இல்ல!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், ஆர்பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓ.பி.எஸ்ஸை சந்தித்த பிறகு திரும்பிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திடம் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, நாங்க வேற விஷயமா அண்ணனை பார்க்க வந்தோம் என மழுப்பலாக கூறினார்.

அதிமுக

அதிமுக

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. வரும் 23-ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலோசனைக் கூட்டத்திலும் ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வீட்டில் ஆலோசனை

வீட்டில் ஆலோசனை

எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தனக்கு எதிராகத் திரும்பியதால் ஒ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, தனது வீட்டில் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்கள்

சற்று முன்பு ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வைத்திலிங்கம், காமராஜ், மணிகண்டன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரோடு ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். திடீரென முக்கிய நிர்வாகிகள் ஓ.பி.எஸ் வீட்டிற்கு வந்து ஆலோசனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வேற விஷயமா

வேற விஷயமா

ஓ.பி.எஸ்ஸை சந்தித்த பிறகு திரும்பிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திடம் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "அண்ணனை பார்க்க வந்தோம். ஒற்றைத் தலைமை விஷயம் பற்றியோ, 23ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் பற்றியோ எந்த விஷயத்தையும் அவரிடம் பேசவில்லை. நாங்க வேற விஷயமா அண்ணனை பார்க்க வந்தோம். இன்றைய கூட்டத்தில் பலரும் பல கருத்துகளைத் தெரிவித்தனர். சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றனர். சிலர் இரட்டைத் தலைமையே இருக்கட்டும் என்றனர். சிலர் இ.பி.எஸ் தலைமை வேண்டும் என்றனர். சிலர் ஓ.பி.எஸ் தலைமை வேண்டும் என்றனர்." எனத் தெரிவித்தார்.

கட்சி வலிமையாக இருக்க வேண்டும்

கட்சி வலிமையாக இருக்க வேண்டும்

மேலும், ஒற்றைத் தலைமை பற்றிய கேள்விக்கு பதிலளித்த வைத்திலிங்கம், "எங்கள் கருத்து கட்சி வலிமையாக இருக்க வேண்டும். ஜெயலலிதா எண்ணப்படி எங்கள் கட்சி நூறாண்டு காலம் இருக்க வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஒற்றைத் தலைமை பற்றி இப்போது எதுவும் பேசவில்லை. முடிவை எட்டும்போது சொல்கிறோம்" எனத் தெரிவித்துவிட்டு எஸ்கேப் ஆனார்.

உதயகுமார்

உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த மற்றொரு அமைச்சரான ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கட்சித் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதுவே எங்கள் முடிவு" எனத் தெரிவித்துவிட்டுக் கிளம்பினார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்துப் பேசவில்லை என்று கூறினாலும், இன்றைய பேச்சு முழுக்க முழுக்க அதைப் பற்றியதாகத்தான் இருந்திருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+