சிலுப்பிக் கொண்டு நிற்கும் தம்பிதுரை.. டென்ஷனில் பாஜக.. கூல் படுத்த களம் குதித்த அதிமுக!
Recommended Video

சென்னை: சிலுப்பிக் கொண்டு சண்டைக் கோழி போல காணப்படும் தம்பிதுரையால் பாஜக தரப்பு செம டென்ஷனாக உள்ளதாம். அவரை அடக்கி வைக்குமாறு பாஜக மேலிடத்திலிருந்து கண்டிப்பான உத்தரவு வந்துள்ளதால், அதிமுக மூத்த தலைவர்கள் தம்பிதுரையை அமைதிப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜக கட்டுப்பாட்டுக்குள் அதிமுக தலைவர்கள் போய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட தம்பிதுரை மட்டும் சிங்கிளாக சிலம்பம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடியையும், பாஜக ஆட்சியையும் விட்டு விளாசி வருகிறார். வெளியில்தான் வெளுக்கிறார் என்று பார்த்தால் லோக்சபாவிலும் நேற்று தாறுமாறாக கிழித்தெடுத்து விட்டார். இதனால் பாஜக தலைமை கடுப்பாகியுள்ளதாம்.

கூல்டவுன் கூல்டவுன்
அவரை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வாங்க. இல்லாவிட்டால் கஷ்டம் என்று அதிமுக தலைமைக்கு பாஜக தலைமை கடுப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிமுக தலைவர்கள் தம்பிதுரையை கூல்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளனர்.

ஆபரேஷன் தம்பிதுரை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், தம்பிதுரையை எப்படி அமைதிப்படுத்துவது என்று தெரியாமல் தர்மசங்கடத்தில் மூழ்கியுள்ளனராம். முதல்வரே தம்பிதுரையிடம் பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் தம்பிதுரை அடங்குவதாக இல்லையாம்.

பாஜகவை தூக்கிப் போடுங்க
தன்னிடம் சமாதானம் பேசியபோது, பாஜகவை நாம் ஏன் தேவையில்லாமல் வளர்த்து விட வேண்டும். அக்கட்சியை தூக்கி எறிங்க என்று கோபமாக கூறினாராம் தம்பிதுரை. முதல்வரும், துணை முதல்வரும் சமாதானம் பேசியும் கூட அவர் மசிவது போல இல்லையாம்.

என்ன நடக்கப் போகுதோ
இப்படி தம்பிதுரை சமாதானத்திற்கு வராமல் தொடர்ந்து பிடிவாதமாக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அதிமுக தலைமை பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ளதாம். எப்படி இவரை வழிக்கு கொண்டு வருவது என்ற தீவிர சிந்தனையில் இறங்கியுள்ளனராம். மறுபக்கம் சசிகலா தரப்பு, தம்பிதுரையின் சிலம்பலைப் பார்த்து உள்ளூர ரசித்துக் கொண்டிருக்கிறதாம்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications