10 மாவட்டங்களில் அதிமுக முன்னிலை.. '5'ல் கடும் போட்டி - கோவை, சேலத்தில் 'ஃபுல்' சப்போர்ட்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் 2021 வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், அதிமுக எந்தெந்த மாவட்டங்களில் முன்னிலை வகிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (மே.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
இதில் பல இடங்களில் திமுக முன்னனிலை பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்தாலும், மோசம் என்று சொல்லும் அளவுக்கு இல்லை. எனினும், மற்ற கட்சிகளில் மக்கள் நீதி மய்யம் மட்டும் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் அக்கட்சி லீடிங்கில் உள்ளது.

93ல் அதிமுக
காலை 11:15 மணி நிலவரப்படி, மொத்தம் 234 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், 140 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 93 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் லீடிங் பெற்றுள்ளது.

நெல்லையில் அதிமுக
இதில், எந்தெந்த மாவட்டங்களில் அதிமுக முன்னிலையில் உள்ளது என்று பார்க்கலாம். திருநெல்வேலியில் மொத்தம் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில், அதிமுக 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக 2 இடங்களில் லீடிங். தென்காசி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளில் 4 இடங்களில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.

திருப்பூரில் மெகா லீடிங்
மதுரையில் மொத்தம் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 5 - 5 என்று பலத்த போட்டி நீடிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 6 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் திமுகவும் முன்னிலையில் உள்ளன.

துண்டு போடும் மநீம
கோவையில் மொத்தமுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 7 இடங்களில் அதிமுக லீடிங்கில் உள்ளது. 2 இடங்களில் திமுகவும், 1 இடத்தில் மக்கள் நீதி மய்யமும் முன்னிலையில் உள்ளன. அரியலூரில் மொத்தமுள்ள 2 சட்டமன்ற தொகுதிகளில் 1 -1 என்று இரு கழகங்களும் சம நிலையில் உள்ளன.

கடலூரில் டஃப்
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 4ல் அதிமுக முன்னிலை வகிக்கிறது. 2 தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது. கடலூரில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 5 இடங்களில் அதிமுகவும், 4ல் திமுகவும் லீடிங்கில் உள்ளன.

சவால் தரும் ஈரோடு
சேலம் மாவட்டத்தை கிட்டத்தட்ட அதிமுக ஸ்வீப் செய்துவிடும் போலிருக்கிறது. மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. 2ல் மட்டும் திமுக லீடிங்கில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் 8 தொகுதிகளில் இரு கட்சிகளும் 4 -4 என்று சம நிலையில் உள்ளன.

நீலகிரியும் ஆதரவு
நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 தொகுதிகளிலும் அதிமுகவே முன்னிலையில் உள்ளது. தருமபுரி மாவட்டத்திலும் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் அதிமுகவே முன்னிலையில் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில் 3 இடங்களில் அதிமுக முன்னிலை பெறுகிறது. கிருஷ்ணகிரியில் 6 தொகுதிகளில் 3 - 3 என சமநிலை நீடிக்கிறது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மொத்தமுள்ள நான்கு தொகுதியிலும் 2 - 2 என்ற சமநிலை நிலவுகிறது.
-
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!











Click it and Unblock the Notifications