"ராஜதந்திரி" ஸ்டாலின்.. கலர் மாறும் அதிமுக.. 2 "புள்ளிகள்" மட்டுமல்ல.. மெல்ல சாயும் "தலை"கள்!
அதிமுக நிர்வாகி ஸ்டாலினை பாராட்டி ஒரு போஸ்டர் ஒட்டி உள்ளார்
சென்னை: முதல்வர் முக ஸ்டாலினை பாராட்டி, ஒருவர் போஸ்டர் ஒட்டி உள்ளார்.. இது இந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்பட காரணம், போஸ்டர் ஒட்டியவர் அதிமுக பிரமுகராம்..!
Recommended Video
ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.. தொற்றை கட்டுப்படுத்துவது ஒருபக்கம், மக்களின் நலத்திட்டங்கள் மறுபக்கம், ஆட்சி அதிகாரங்களை சரியான திசையில் செயல்படுத்ததுவது இன்னொரு பக்கம் என நாலாபக்கமும் கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டி உள்ளது.
மிஸ்டர் கிளீன் என்பவர்களையே முக்கிய அதிகாரிகளாக ஸ்டாலின் நியமித்துள்ளதும், மூத்த மற்றும் புதிய முகங்களுடன் திமுக அமைச்சரவையை நியமித்துள்ளதும், மாற்று கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அமைச்சர்கள்
அந்த வகையில், இந்த ஒரே வாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜியும் வாய்விட்டு, ஸ்டாலினின் செயல்பாடுகளை பாராட்டிவிட்டனர்.. இதுவே ஆச்சரியமான விஷயமாக பேசப்பட்டு வந்தது.. கடந்த காலங்களில் அதிக அளவு விமர்சித்தவர்களே, ஸ்டாலினை பாராட்டும் அதிசய நிகழ்வும் இந்த திமுக ஆட்சியில் நடந்து வருகிறது.

போஸ்டர்
அந்தவகையில் அதிமுக நிர்வாகி ஒருவர், ஸ்டாலினை பாராட்டி பகிரங்கமாக போஸ்டரே ஒட்டிவிட்டார்.. உளுந்தூர்பேட்டை தொகுதியில் திருநாவலூர் ஒன்றியம் உள்ளது.. இதில் ஏற்கனவே அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்தவர்தான் வண்டிப்பாளையம் ராஜா. இவர் தமிழக அளவில் அம்மா சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்துவருகிறார்.

ஜனநாயகம்
உளுந்தூர்பேட்டையில் திமுகவே தற்போது வெற்றி பெற்றுள்ளது.. மணிகண்ணன் என்பவர் எம்எல்ஏவாகி இருக்கிறார்.. இவரை ஆதரித்தும், முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் அவர்களை வாழ்த்தியும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார் ராஜா.. அந்த போஸ்டரில் "பணநாயகம் எப்போதும் வெல்லாது... பணத்தால் மக்களை விலைக்கு வாங்க முடியாது. ஜனநாயகம் வெல்லும் என்பதற்கு உதாரணம் மணிகண்ணன் வெற்றி" என்று தெரிவித்துள்ளார்.

பரபரப்பு
அப்படியென்றால், அதிமுக தரப்பு தேர்தலில் பணத்தை வாரி இறைத்தது என்று ராஜா மறைமுகமாகவே சொல்கிறார் போலும்.. ஆனால், அதிமுக பிரமுகர் ஒருவர், முதல்வரையும் திமுக எம்எல்ஏவையும் பாராட்டி போஸ்டர் ஒட்டியுள்ளதை பார்த்து உளுந்தூர்பேட்டை மட்டுமல்ல, அதிமுக தலைமையே வாயடைத்து போயுள்ளதாம்..!
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications