வரும் 7ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்... எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையில் வரும் 7ஆம் தேதி கட்சி தலைமையகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அதிமுக வெறும் 64 இடங்களில் மட்டுமே வென்றது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

ADMK MLAs meeting on May 5th at the party headquarters

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 7ஆம் தேதி கட்சி தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

ADMK MLAs meeting on May 5th at the party headquarters

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெற்றி பெற்றுள்ள அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் அதிமுகவின் செயல்பாடு மற்றும் எதிர்க்கட்சி தலைவரைத் தேர்வு செய்வது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+