கனிமொழியை பாராட்டி ஒரு நாள்தான் ஆச்சு.. அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கட்சி பதவி அதிரடியாக பறிப்பு
சென்னை: திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோரை பாராட்டி பேசி இருந்த நிலையில், அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திமுக செய்தி தொடர்பு செயலாளரும், எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவனின் மகள் திருமண விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

டிகேஎஸ் இளங்கோவனின் மகள் திருமண விழா
இந்த திருமண விழாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோரை மிகவும் புகழ்ந்து தள்ளினார். அப்போது அவர் பேசுகையில், ' டிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி ஆகியோர் நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடர்பாக எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். ஒரு முறை மத்திய அமைச்சருடன் விவாதித்தபோது அனுபவம் இல்லாத காரணத்தால் சண்டை போடும் நிகழ்வு நடந்தது. அப்போது சகோதரி கனிமொழி பொறுமையாக இருங்கள் நான் பேசுகிறேன் என்று சொன்னார்.

திமுக எம்.பி.க்களை பாராட்டி பேசினார்
நான் சர்ச்சையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதையும் கனிமொழி எனக்குக் கற்றுக் கொடுத்தார். தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அதிக பற்று கொண்டவர் சகோதரி கனிமொழி. ஆர்எஸ் பாரதியும் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்' என்று கூறி இருந்தார் நவநீதகிருஷ்ணன். திமுக எம்.பி.க்களை அதிமுக எம்பி பாராட்டி பேசியதால் அதிமுகவினர் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.

நவநீதகிருஷ்ணனின் கட்சி பதவி பறிப்பு
இந்த நிலையில் நவநீதகிருஷ்ணனின் கட்சி பதவியை அதிமுக திடீரென பறித்துள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நவநீதகிருஷ்ணன் இருந்து வந்த நிலையில் அவர் அந்த பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளனர்.

இதுதான் காரணமா?
டி.கே.எஸ் இளங்கோவன் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டதாலும், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோரை பாராட்டி பேசியதாலும் நவநீதகிருஷ்ணன் பதவி பறிக்கப்பட்டதாக தகவல்கள் உலா வருகின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications