துளிகள் வெளியேறினால் கடலுக்கு நஷ்டமில்லை - புலிகளைப் போல பேசுவதா? - தேமுதிகவை விமர்சித்த நமது அம்மா
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகி உள்ளது. இது பற்றி நமது அம்மா நாளிதழில் விமர்சனம் வெளியாகியுள்ளது. துளிகள் வெளியேறினால் கடலுக்கு நஷ்டமில்லை என்று நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: துளிகள் வெளியேறினால் கடலுக்கு நஷ்டமில்லை என்று அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது பற்றி நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது. வெளியேறிய துளிகள் தங்களைப் புலிகளைப் போல நினைத்து வாய்சவடால் பேசுவதுதான் வருத்தமளிக்கிறது என்றும் அந்த கட்டுறையில் தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கூட்டணியை விட்டு விலகுவதாக நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதிமுகவிடம் தேமுதிக கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது.
கூட்டணியில் இருந்து வெளியேறிய உடனேயே அதிமுகவை கடுமையாக விமர்சித்தார் அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி .முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல் ஆக இருக்கிறார். அவர் பாமகவின் கொள்கைப்பரப்பு செயலராக உள்ளார் என்று பரபரப்பான பேசினார்.

விஜயகாந்த் மகன் பேச்சு
விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும், அதிமுகவை கடுமையாக பேசினார். அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோற்கும் என்றும் இனிதான் உண்மையான தேமுதிகவை பார்ப்பீர்கள் என்றும் பேசினார் விஜய பிரபாகரன். சிங்கம் குகையை விட்டு வெளியே வந்து விட்டது இனி வேட்டை ஆரம்பம் என்றும் சொன்னார். 234 தொகுதிகளிலும் அதிமுகவின் தோல்விக்காக உழைக்கப் போவதாகவும் கூறினார்.

நல்ல அரசியல்வாதிக்கு அழகா
சுதீஷ், விஜய பிரபாகரன் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். கூட்டணியை விட்டு வெளியே செல்பவர்கள் அமைதியாக செல்ல வேண்டும் அதை விட்டு தேவையில்லாத பேச்சுக்களை பேசுவது நல்ல அரசியல்வாதிக்கு அழகல்ல என்றும் கண்டனம் தெரிவித்தார்.

துளிகள் வெளியேறினால்
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில், தேமுதிகவை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், துளிகள் வெளியேறினால் கடலுக்கு நஷ்டமல்ல என்றும், வெளியேறிய துளிகள் தங்களை புலிகள் என நினைத்து வாய் சவடால் அடிப்பது வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்து
2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது தேமுதிகவிற்கு அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்ததே அதிமுகதான். முரசு சின்னத்தை பெற்றுக்கொடுத்தது அதிமுகதான். எதிர்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தை விஜயகாந்திற்கு கிடைக்கச் செய்ததும் அதிமுக தொண்டர்களின் அயராத உழைப்புதான். தேமுதிக அதையெல்லாம் மறந்து விட்டது என்று தெரிவித்துள்ளது.

படுதோல்வி
கடந்த சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. ஊன்றுகோலுடன் நடக்க பழகியிருக்கும் தேமுதிக, இமயமலை போல உள்ள அதிமுக என்னும் பேரியக்கத்தை பார்த்து சவால் விடுகிறது. விஜயகாந்தின் மகன் எலும்பில்லாத நாக்கை வைத்து தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்.

சுதீஷ் பேச்சு
விஜயகாந்தின் மச்சான் சுதீசும் எங்களை மலேசியாவில கூப்பிட்டாங்க...மானாமதுரையில கூப்பிட்டாங்க என்று ஏகத்திற்கும் வசனம் பேசுகிறார். சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு கத்துகிற கழுதை கண்ணை திறந்து பார்த்த போதுதான் குப்பைத்தொட்டிக்கு அருகில் இருப்பது புரிய வரும்.

திவாலாகும் கட்சி
அதிமுக என்கிற அன்பியல் இயக்கத்தின் உன்னதம் தேமுதிக என்கிற தேய்ந்து முடிந்து திவாலாகிற கட்சிக்கு புரிய காத்திருக்கிறது. அதுவரை பேசும்வரை பேசட்டும் அணையப்போகிற நெருப்பாக ஆலவட்டம் போடட்டும் என்று அந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications