அதிமுகவிலிருந்து விலகி விஜயின் தவெகவில் இணைந்தார் நிர்மல் குமார்! என்ன பதவி தெரியுமா?
சென்னை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார் (Nirmal Kumar), இன்றைய தினம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்தார்.
முன்னதாக, நிர்மல் குமாரின் ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பதவிகளையும், இரட்டை இலை சின்னத்தையும் நிர்மல் குமார் நீக்கியிருந்தார். இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவர் பனையூரில் அலுவலகத்திற்கு வந்து விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார்.

ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியின் ஆலோசகர் அல்லது மாநில துணைப் பதவியும் தேர்தல் யுத்திகளை வகுக்கும் முக்கியமான பொறுப்பும் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. அதே வேளையில் அவர் விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் கீழ் செயல்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இன்று 2ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. இதில் விஜய் கலந்து கொண்டு நிர்வாகிகளை நியமிக்கிறார். அப்போது ஆதவ் அர்ஜுனாவின் நியமனம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
அது போல் நிர்மல் குமார் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார். பிறகு விஜய் பனையூர் அலுவலகத்திற்கு வந்ததும் அவரை சந்தித்து தவெகவில் நிர்மல் குமார் இணைந்தார். அவருக்கு தவெக துணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்தவர் சிடிஆர் நிர்மல் குமார். இவர் அந்த கட்சியில் இருந்து விலகி கடந்த 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமாரை பொருத்தவரை அவர் சிறந்த வியூக வகுப்பாளர். சமூகவலைதளங்களில் அரசுக்கு எதிராக முக்கிய பிரச்சினைகளை எழுப்புவார்.
அவர் தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்மல் குமார் இணைவதால் அக்கட்சிக்கு வலுசேர்க்கும் என்றே சொல்லப்படுகிறது. மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்படாத, ஒதுக்கப்படாத நிர்மல் குமார் தற்போது விஜய் கட்சியில் இணைவதால் அவருக்கு உரிய பதவியும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதிமுகவிலிருந்து நிர்மல் குமார் எதற்காக விலகினார் என தெரியவில்லை.
ஆதவ் அர்ஜுனாவும் சிறந்த தேர்தல் வியூக வகுப்பாளர், அவர் மாநாடு உள்ளிட்டவைகளை சிறப்பாக நடத்துவதில் வல்லவர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்த போதே, அவர் நிரூபித்துவிட்டார். இவர்களை போல் ஏராளமான திறமையான இளைஞர்கள் தவெகவில் இணைவார்கள் என தெரிகிறது.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications