"அதிமுக ஆபீஸ் சென்னையில் இருந்தாலும்.. ஆர்டர் எல்லாம் டெல்லியில் இருந்துதான் வருது!" கனிமொழி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அலுவலகம் டெல்லியில் இருப்பதாகக் கனிமொழி கூறியிருந்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்திருந்தார். அதிமுக ஆபீஸ் சென்னையிலேயே இருப்பதாக எடப்பாடி கூறியிருந்தார். இதற்கிடையே எடப்பாடிக்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ள கனிமொழி, ஆபீஸ் சென்னையில் இருந்தாலும் ஆர்டர்கள் எல்லாம் டெல்லியில் இருந்தே வருவதாகச் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் இப்போதே தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது. அனைத்துக் கட்சிகளுமே தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் நேரடியாக மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் அதிமுக- பாஜக கூட்டணியை விமர்சித்த கனிமொழி, அதிமுக கட்சி அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்டது என்று கனிமொழி விமர்சித்திருந்தார்.

ADMK office is in Chennai but orders are coming from Delhi Kanimozhi reply to Edappadi palanisamy

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கனிமொழிக்கு பதிலடி கொடுத்திருந்தார். நீலகிரியில் நேற்று மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி, "அதிமுக தலைமை அலுவலகம் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருப்பதாகக் கனிமொழி பேசிக் கொண்டிருக்கிறார். கனிமொழி கனவு கண்டு கொண்டு இருக்கிறார் போல.. சந்தேகம் இருந்தால் சென்னையில் அலுவலகத்திற்கு வந்து பார்க்கவும்" எனப் பதில் கொடுத்திருந்தார்.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கனிமொழி, அதிமுக அலுவலகம் சென்னையில் இருந்தாலும் கூட ஆர்டர்கள் எல்லாம் டெல்லியில் இருந்தே வருவதாகச் சாடினார். மேலும், பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என்றவர்கள் இப்போது மட்டும் ஏன் கூட்டணி வைத்துக் கொண்டனர் என்றும் கேள்வி எழுப்பினார்.

கனிமொழி

இது தொடர்பாக அவர் மேலும், பேசுகையில், "இனி எந்தக் காலத்திலும் பாஜக உடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனச் சொன்னவர் தான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.! ஆனால், தேர்தல் வந்தவுடன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் எங்கு இருந்தார் என்றே தெரியாமல் இருந்தது. இப்போது தேர்தல் வந்தவுடன் வெளியே வந்துவிட்டார். நம்ம முதல்வர் சொன்னது போலச் சுந்தரா டிரவல்ஸ் பஸ்ஸை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். திடீரென இப்போது வந்து கடந்த 4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் எனக் கேட்கிறார். நீங்கள் 4 ஆண்டுகளாக ஆளைக் காணோம். இதன் காரணமாகவே நாங்கள் என்ன செய்தோம் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.

அதிகாரம் டெல்லிக்கு தான்

ஆனாலும், அதிமுகவை தயவு செய்து நல்ல முறையில் நடத்துங்கள் என்றே கவலையோடும் அக்கறையோடும் சொல்கிறோம். இதன் காரணமாகவே அதிமுக கட்சி அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றிவிட்டனர் என கவலையுடன் சொல்கிறோம். கட்சி ஆபீஸ் சென்னையிலேயே இருப்பதாக எடப்பாடி எனக்குப் பதில் வேற சொல்லி இருக்கிறார்.

கட்டிடம் அங்கு தான் இருக்கு. அது எனக்குத் தெளிவாகவே தெரியும். கட்டிடத்தை டெல்லிக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதால் விட்டு வைத்திருக்கிறார்கள். அது முடிந்தால் கட்டிடத்தையும் கூட பார்ட் பார்ட்டாக பிரித்து டெல்லிக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால், அதிமுக அலுவலகம் செயல்படுவதும், கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதும் டெல்லியில் இருந்து தான். இதை மறுக்கவே முடியாது.

கடும் தாக்கு

நீங்கள் கர்சீப்பை வைத்து முகத்தை மறைத்தாலும், துடைத்தாலும் அது நீங்கள் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்களுக்கே அது அவமானமாக இருப்பதையே அது காட்டுகிறது. இதை வைத்துத் தான் மீண்டும் சொல்கிறேன். அதிமுக அலுவலகம் இங்கு இருந்தாலும், அதிகாரம் அனைத்தும் டெல்லிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+