மறப்போம்.. மன்னிப்போம்.. விடாமல் தேமுதிகவின் மார்க்கெட்டை ஏற்றும் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்களை பற்றி அவர்கள் விமர்சித்திருந்தாலும் மறப்போம் , மன்னிப்போம் என்ற அண்ணாவின் கோட்பாடுகளின்படி நாங்கள் நடந்து கொள்வோம் என இன்னமும் தேமுதிகவின் மார்க்கெட்டை ஏற்றும் வகையில் அதிமுக பேசி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தொகுதி எண்ணிக்கையை தங்களது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டனர். ஆனால் அதிமுகவோ தேமுதிகவுடன் மல்லுக் கட்டி வருகிறது.

இந்த நிலையில் தேமுதிகவோ ஒரே நேரத்தில் திமுகவுடனும் அதிமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இது இரு கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக

தேமுதிக

என்னதான் மரியாதை நிமித்தமாக துரைமுருகனை சந்தித்தோம் என தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் கூறினாலும் கூட்டணிக்காக வந்தனர் என்பதை துரைமுருகன் போட்டுடைத்து தேமுதிகவை கடுப்பில் ஆழ்த்திவிட்டார்.

தலையங்கம்

தலையங்கம்

இந்த விரக்தியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவும் பொறுமையை இழந்து அதிமுகவையும் திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதையடுத்து திமுகவின் முரசொலியில் பிரேமலதாவை கடுமையாக தாக்கி தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.

விவாதங்கள்

விவாதங்கள்

அதிமுகவின் நிர்வாகிகளும் தங்கள் வாய்க்கு வந்தபடி தேமுதிகவை விமர்சனம் செய்தனர். இதனால் தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்க்காதோ என்ற அளவுக்கு விவாதங்கள் எழுந்தன.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தேமுதிகவுக்கு முட்டுக் கொடுத்து அதன் மார்க்கெட்டை உயர்த்தும் அளவுக்கே பேசியுள்ளார். அவர் கூறுகையில் கடந்த காலங்களில் தேமுதிகவினர் அதிமுகவை விமர்சனம் செய்து பேசியதை நாங்கள் மறந்துவிட்டோம்.

மன்னிப்போம்

மன்னிப்போம்

அண்ணா வழியில் மறப்போம், மன்னிப்போம் அணுகுமுறையைத்தான் நாங்கள் கையாள்கிறோம் என்றார். அதிமுகவின் 37 எம்பிக்களால் தமிழகத்துக்கு பலன் இல்லை என பிரேமலதா முன் வைத்த கருத்து குறித்தும் அமைச்சர் ஜெயக்குமார் சிரித்தபடியே விளக்கினாரே தவிர தேமுதிகவை இம்மியளவும் விமர்சிக்கவில்லை.

விமர்சனம் செய்தாலும்

விமர்சனம் செய்தாலும்

பொதுவாக அதிமுகவை யார் விமர்சனம் செய்தாலும் அவர்களை தனது பிரஸ்மீட்டிலேயே விளாசி விடும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பொறுமை காத்தார். மேலும் பத்திரிகையாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியிருக்கக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது. சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பதை போல் ஏதாவது ஒரு வகையில் தேமுதிகவால் பலன் கிடைக்கும் என அதிமுக கருதுகிறது போலும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+