உள்ளாட்சி தேர்தல்: கூட்டணியிலிருந்து வெளியேறிய பாஜக.. வேட்பாளர்களை அறிவித்து அதிமுக அதிரடி
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறிய நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக அறிவித்தது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக
இதற்காக அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் அதிமுக- பாஜக இடையே இடப்பங்கீட்டு பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. எனினும் அதிக இடங்களை ஒதுக்க அதிமுக முன்வராததால் பாஜக கூட்டணியை முறித்து கொள்ள முடிவு செய்திருந்தது.

வேட்பாளர் பட்டியல்
அதற்கேற்ப நேற்றைய தினம் அதிமுக விழுப்புரம், கடலூர், தருமபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து இன்றைய தினம் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையே அதிமுக இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

8 பேரூராட்சிகள்
அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், விளாப்பாக்கம், திமிரி, கலவை பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு
தற்போது அதிமுகவுடனான கூட்டணியை பாஜக முறித்து கொள்வதாக அறிவித்துள்ளது. ஆனாலும் அதிமுக- பாஜக கூட்டணி தேசிய அளவில் தொடரும் என பாஜக கூறியுள்ளது. எனவே தேமுதிக, பாமகவை போல அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய பாஜக நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு
ராணிப்பேட்டை பேரூராட்சிக்கு மட்டும் வேட்பாளர்களை அதிமுக இன்றைய தினம் அறிவித்தது. ஆனால் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியதை அடுத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. சேலம், சிவகாசி, ஆவடி, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அது போல் திருவண்ணாமலை, தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, நாகை, அரியலூர், மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி , குமரி ஆகிய நகராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஏற்கெனவே விழுப்புரம், கடலூர், தருமபுரி மாவட்ட நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications