திமுகவால் விஜய்யை நேரடியாக அடிக்க முடியாது.. சீமான் மறைமுக ஸ்வீட்பாக்ஸ் கூட்டணி! கதறவிடும் காயத்ரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் கொள்கைகள் குறித்து மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். இந்த நிலையில் திமுகவால் விஜயை அசைக்க முடியாது, சீமான் போன்றவர்களை வைத்து தாக்குதல் நடத்துவதாக விமர்சித்து இருக்கிறார் அதிமுக காயத்ரி ஜெயராம் ரகுராம்.

தவெக எனும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று முன் தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் நடந்தேறி இருக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

actor vijay seeman gayathri raghuram

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பெரியாரின் கடவுள் மறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பகுத்தறிவு பெண்கள் முன்னேற்றம் சமூக நீதி ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார்.

இது பல விமர்சங்களை பெற்றுள்ளது. பகுத்தறிவுக் கொள்கையில் முதலாவது கடவுள் மறுப்பு எனும் பெரியாரிய ஆதரவாளர்கள் விஜய் குழப்ப மனநிலையில் இருப்பதாக விமர்சிக்கின்றனர். அதே நேரத்தில் திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், விஜயின் கருத்து கருவாட்டு சாம்பார் போல் உள்ளது என கூறினார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் விஜயை கடுமையாக விமர்சித்தார். கூட்டத்தில் பேசிய அவர்,” விஜயை போல் நான் குட்டி கதை சொல்பவன் இல்லை வரலாற்றை கற்பிக்க வந்திருக்கிறேன் இது ஒரு பண்பாட்டு புரட்சி நீங்கள் இனிமேல் தான் பெரியார் அம்பேத்கரை படிக்க வேண்டும் நாங்கள் அதில் பிஹெச்டி வாங்கி விட்டோம்

சாலையில் ஒன்று அந்தப் பக்கம் நில் இல்லை என்றால் இந்த பக்கம் நில் நடுவில் நின்றால் லாரி அடித்து செத்து விடுவாய். இது நடுநிலை இல்லை. கொடுநிலை தகப்பனே வந்தாலும் எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது அண்ணனும் கிடையாது. ஒன்பது தேர்தல்களில் தோல்வியை சந்தித்தும் பத்தாவது முறையும் ஒரு கட்சி தனித்துப் போட்டியில் இருந்தால் அது நாம் தமிழர் கட்சி தான். வேலுநாச்சியார் படத்தை வைத்து விட்டால் போதுமா. வேலுநாச்சியார் யார் என்று தெரியுமா? சத்தமாக பேச நான் வரவில்லை என்றால் வேலுநாச்சியார், அழகுமுத்துக்கோன், அஞ்சலை, சேர சோழ பாண்டியர் யார் என்று தெரியாது, நீங்கள் வைத்த கட்டவுட் எல்லாம் நாங்கள் வரைய வைத்தவை” என பேசியிருந்தார்.

actor vijay seeman gayathri raghuram

இந்த நிலையில் திமுகவால் விஜயை அசைக்க முடியாது, சீமான் போன்றவர்களை வைத்து தாக்குதல் நடத்துவதாக விமர்சித்து இருக்கிறார் அதிமுக காயத்ரி ஜெயராம் ரகுராம். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திமுகவின் காஸ்ட்லி கதறல், திமுகவால் விஜய்யை நேரடியாக அடிக்க முடியாது. ஓசியில் கிடைத்த திமுக துணை முதல்வர் பதவி உதயநிதியோ, முதல்வர் ஸ்டாலினோ விஜய் பெயரைச் சொல்லவே பயப்படுகிறார்கள்.

அதனால் அவர்கள் தங்கள் நேரடி கூட்டணியையும், மறைமுக ஸ்வீட்பாக்ஸ் கூட்டணியையும் விஜய்யின் பெயரைக் கெடுக்கும் முயற்சிக்கு அனுப்புகிறார்கள். இந்த கதறல் திமுக மற்றும் பிற கட்சிகளுக்கு தேவை இல்லை. பயப்பட ஒன்றுமில்லை மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+