இனிமேல் அதிமுகவுக்கு பொதுச் செயலாளரே கிடையாதா.. வைத்திலிங்கம் இப்படிச் சொல்லிட்டாரே!
பொதுச்செயலாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வைத்திலிங்கம் கூறியுள்ளார்
சென்னை: சுத்தம்.. 'பொது செயலாளர்' என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தடாலடியாக தெரிவித்து விட்டார்.
இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. என்றாலும் ஒற்றை தலைமை யார் என்பதை தீர்மானிக்கும் கூட்டமாகவே இது பொதுவாக கருதப்பட்டது.

ஏனெனில், தன்னைதான் பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி மும்முரம் காட்டி வருகிறார் என்றும், இதற்காக எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார் என்றும் சொல்லப்பட்டது. இது போக 2 அமைச்சர்கள் ஆதரவு தரும்படி கேட்க டெல்லிக்கே சென்றதாகவும் கூறப்பட்டது.
அது மட்டுமில்லை.. இன்று காலை "பொதுச்செயலாளர் எடப்பாடியாரே வருக" என்று அதிமுக தலைமை கழகம் எதிரில் பேனர் வைக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடக்கிற இடத்தில் இப்படி ஒரு பேனர் வைத்ததைகூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சம்பந்தமே இல்லாமல், காரைக்குடியில் செங்கோட்டையனை பொதுச்செயலாளர் என்று அச்சிட்டு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதைதான் இன்னும் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.
இவ்வளவும் அதிமுக தரப்பில் நடந்ததற்கு, எந்த ஒரு வார்த்தையும், கண்டனமும், கருத்தும், மறுப்பும் யாருமே சொல்லவில்லை. ஆனால் வைத்திலிங்கமோ, "பொதுச்செயலாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று சொல்லி உள்ளார்.
இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.. வைத்திலிங்கம் எடப்பாடியின் ஆதரவாளர் என்பது தெரிந்த விஷயம்தான். பொதுச்செயலாளராக வர வாய்ப்பு எடப்பாடிக்கு அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், மத்திய அமைச்சர் சீட்டுக்காக முதல்வரிடம் கடுமையாக முயற்சி செய்து அப்செட் ஆனவர் வைத்திலிங்கம். ஒருவேளை இதன்காரணமாகவே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வேண்டாம் என்று சொல்ல வருகிறாரா அல்லது காரைக்குடியில் அடித்த போஸ்டரை கண்டு அரண்டுபோய் இப்படி சொல்ல வருகிறாரா என்பது தெரியவில்லை!
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications