நாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா?.. வைகைச்செல்வன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகமாக உள்ளன. அதற்காக காக்கைகளை தேசிய பறவையாக்க முடியுமா என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தி பேசும் மக்களை சந்தோஷப்படுவதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு ட்வீட்டை போட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் பதிவு செய்த ட்வீட்டில், இதையொட்டி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் இந்தியா பல மொழிளை கொண்ட ஒரு நாடு. இங்கு ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு.

இந்தி

இந்தி

ஆனால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த ஒரு மொழி வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. நாட்டை ஒரே மொழி ஒருமைப்படுத்த வேண்டும் என்றால் அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியாகும்.

ஒரே மொழி

ஒரே மொழி

ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என கருத்தை திணித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக தென்னிந்தியாவில் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மயில்கள்

மயில்கள்

இந்த நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை கூறியுள்ளார். அவர் கூறுகையில் இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால் நாட்டில் மயில்களைவிட காக்கைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

வைகைச்செல்வன்

வைகைச்செல்வன்

அதற்காக காக்கைகளை தேசியப் பறவையாக்க முடியுமா என்று அண்ணா அன்றே கூறியிருந்தார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். இது போல் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் எதிர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+