அதிமுகவின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு? FD-யில் வரும் வட்டி மட்டுமே இவ்வளவா? ஆஹா! கட்சி செழிப்பா இருக்கே!
சென்னை: அதிமுக வங்கி கணக்கில் ரூ.261 கோடி ரூபாய் நிலை வைப்புத்தொகை உள்ளதாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று பொதுக்குழுவில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுகவின் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் தொடர்ந்த பல்வேறு வழக்குகளுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக இந்த ஆண்டுதான் அங்கீகரித்தது. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல்முறையாக இன்று அதிமுக பொதுக்குழு கூடியது.

அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தப் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். மேலும், அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள், தீர்மானங்களை வழிமொழிந்தனர்.
மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகளை திமுக அரசு முறையாக செய்யவில்லை என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் திமுக அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழ் மொழியைக் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய பாஜக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள் பேசினர். முன்னதாக, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். வங்கிகளில் அதிமுக பெயரில் ரூ.261 கோடியே 80 லட்சம் நிலை வைப்புத் தொகை (fixed deposit) உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
அதிமுக சார்பாக வங்கியில், அதிமுகவிற்கு நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.164.70 கோடி, கழக வளர்ச்சி நிதியாக ரூ.97.10 கோடி என மொத்தமாக ரூ.261.80 கோடி நிலை வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு உள்ளதாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
மேலும், கட்சியின் நடப்பு கணக்குகளில் தற்போதைய வங்கி இருப்பு விவரங்களையும் வெளியிட்டார் திண்டுக்கல் சீனிவாசன். அதன்படி, கரூர் வைஸ்யா பேங்க்கில் ரூ.10 கோடியே 88 லட்சம், இந்தியன் வங்கியில் 10,814 ரூபாய், எஸ்.பி.ஐ வங்கியில் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், கரூர் வைஸ்யா வங்கியில் புது கணக்கில் 3 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் உள்ளது.
கழக வளர்ச்சி நிதி வங்கிக் கணக்கில் தற்போதைய கையிருப்பு, கரூர் வைஸ்யா வங்கியில் ரூபாய் 4 கோடியே 9 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய், பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 1 லட்சம் ரூபாய், கழக கட்டிட நிதி கணக்கில் வங்கி கையிருப்பு 2 லட்சத்து 37 ஆயிரம். ஆக மொத்தம், 15 கோடியே 80 லட்சம் ரூபாய் கையிருப்பு உள்ளது.
கழகத்தின் ஃபிக்ஸ்ட் டெபாசிட் மூலம் வட்டி வரவு 13 கோடியே 91 லட்சம் ரூபாய். கழக வளர்ச்சி நிதி ஃபிக்ஸ்டு டெபாசிட் மூலம் வட்டி வரவு 8 கோடியே 62 லட்சம் ரூபாய். கழக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் மூலம் வரவு ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய். கழக உறுப்பினர் உரிமைச்சீட்டுகள் புதுப்பித்த வகையில் வரவு 20 கோடியே 23 லட்சம் ரூபாய். இளைஞர் பாசறை, மகளிர் அணி உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் மூலம் வந்த வரவு 7 லட்சத்து சொச்சம் என்ற விவரங்களையும் அறிவித்தார் திண்டுக்கல் சீனிவாசன்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications