பெரியார் சிலைக்கு மரியாதை...! அதிமுக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆசான் பெரியார்..வியக்க வைத்த டிவிட்டர் வைரல்!- வீடியோ

    சென்னை: தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு வரும் 17-ம் தேதி அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

    செப்.17-ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். மரியாதை செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த நிகழ்வில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    admk tributes to thanthai periyar statue

    மேலும், இதேபோல் அந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழக செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையும் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தான் மரியாதை செலுத்துவார். அதே நிலையை ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் கடைபிடிக்கிறார்கள். இதனிடையே ஜிம்சன் ரவுண்டானா அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக, மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுவது வழக்கம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+