சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக, அமமுக நாட்டுக்கே தேவையில்லாத கட்சிகள்.. வம்பிழுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக, அமமுக நாட்டுக்கே தேவையில்லாத கட்சிகள் - ஜெயக்குமார்- வீடியோ

    சென்னை:லோக்சபா தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும், திமுக, அமமுக கட்சிகள் நாட்டுக்கு தேவையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. முக்கிய கட்சியான அதிமுக யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறது.

    Admk will announce its political alliance on loksabha election soon says minister jayakumar

    பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால்... பாஜகவுடன் கூட்டணி என்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மூத்த தலைவரும்,லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கருத்து கூறி வருகிறார்.

    இந் நிலையில் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து, கட்சியில் இருக்கும் தனிப்பட்ட மனிதரின் எந்த கருத்தையும் ஏற்க முடியாது. கட்சியின் கருத்து என்பது அனைவரும் சேர்ந்து கூறுவது.

    வரக்கூடிய லோக்சபா தேர்தலில் அதிமுகவின் இலக்கு 40 தொகுதிகளை கைப்பற்றுவதே ஆகும். பாஜகவுடன் தேமுதிக கூட்டணி தொடர்பாக பேசுவது என்று தகவல்களுக்கு நான் பதில் கூறமுடியாது.

    திமுக எங்களின் பிரதான எதிரி.... துரோகி என்பது அமமுக. எனவே.. திமுக, அமமுக கட்சிகள் நாட்டுக்கு அவசியமில்லை. இவ்விரு கட்சிகளை தவிர யாரோடு வேண்டுமானாலும் அதிமுக கூட்டணி வைக்கலாம்.
    யாருடன் கூட்டணி என்பதை தலைமை முடிவு செய்து அதனை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும். அப்போது தான் கூட்டணி யாருடன் என்பது தெரியவரும் என்று கூறினார்.

    English summary
    ADMK will announce its political alliance on loksabha election soon says minister Jayakumar in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X